மது போதையில் தன் மனைவியின் மீதுள்ள சந்தேகத்தின் பெயரில் அண்டை வீட்டுக்காரரின் காரின் கண்ணாடியை உடைத்து சேதப்படுத்திய சம்பவம் சமூகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தனிப்பட்ட பிரச்சினைகளாக இருந்தாலும் அல்லது சந்தேகமாக இருந்தாலும், சட்டத்தை கையில் எடுத்து பொதுவெளியில் இப்படிப்பட்ட வன்முறையில் ஈடுபட யாருக்கும் உரிமையும் அதிகாரமும் கிடையாது. இது போன்ற சட்டவிரோத செயல்கள் கடுமையான குற்றத்தின் கீழ் வரக்கூடியவை.
குடும்ப வாழ்க்கையில் பிளவுகள் அல்லது கணவன்-மனைவிக்கிடையே புரிதலின்மை ஏற்படும் போது, அதனைத் தீர்க்க சட்டப்பூர்வமான வழிகளோ அல்லது குடும்பத்தினரிடம் பேசி முடிவு எடுப்பதோ மட்டுமே சரியான வழியாக இருக்க முடியும். மாறாக, குடித்துவிட்டு பொதுமக்களுக்கும் மற்றவர்களின் சொத்துக்களுக்கும் சேதம் விளைவிப்பது எந்த வகையிலும் நியாயமாகாது. இதன் மூலம் பாதிக்கப்பட்ட நபர்கள் காவல் நிலையத்தை நாடி முறையான நடவடிக்கை எடுக்க முழு உரிமை உண்டு.
https://twitter.com/Wallahhabebe/status/2109091493659164686/video/1
மறுபுறம், ஒரு குடும்பத்தில் பரஸ்பர அன்பும் அரவணைப்பும் இல்லாத பட்சத்தில், அந்த உறவில் சிக்கல்கள் எழுவது இயல்பே. கணவரின் அலட்சியம் மற்றும் சந்தேக புத்தியால் மன உளைச்சலுக்கு ஆளாகும் மனைவிகள், தங்களின் சுயமரியாதையைக் காத்துக்கொள்ளவும், வாழ்வின் அடுத்த கட்ட நகர்வுகளைத் தீர்மானிக்கவும் சம்மந்தப்பட்ட சட்ட உதவிகளைப் பெறலாம் அல்லது விவாகரத்து போன்ற சரியான முடிவுகளை எடுக்க உரிமையுண்டு. வன்முறையைச் சகித்துக்கொள்வதை விட, சட்டப்பூர்வமான சுதந்திரமான பாதையைத் தேர்ந்தெடுப்பதே சாலச்சிறந்தது.
மனைவியைப் பிரிந்து வாழ்ந்துவந்த ஆட்டோ ஓட்டுநரான ரமேஷ், பாபு என்பவரின் மகளோடு நட்பு பாராட்டி வந்துள்ளார். இந்தத் தொடர்பை பாபு…
சம்பல் மாவட்டம் பஹ்ஜோய் காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில், கூடுதல் வரதட்சணையாக மோட்டார் சைக்கிளும் தங்கச் சங்கிலியும் தராத காரணத்தால் ராதா…
வீட்டில் பரிசோதித்த கர்ப்பப் பரிசோதனை முடிவும் வயிறு பெரிதானதும் ஒரு தாய்க்குத் தன் பதின்ம வயது மகள் மீது தவறான…
மத்தியப் பிரதேசத்தின் ராய்சென் மாவட்டம், தேவரி வட்டாரத்தில் அமைந்துள்ள படாய் கிராமத்து நர்மதை ஆற்றங்கரையில், விளையாடிக்கொண்டிருந்த சிறுவர்கள் மண்ணைத் தோண்டியபோது…
பீகார் மாநிலம் பாட்னா அருகிலுள்ள பார் பகுதியில் தீபாவளி பண்டிகையன்று இரவு அதிர்ச்சிகரமான குற்றச்சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. வெகுநேரமாகியும் வீடு…
புனே அருகேயுள்ள லோனி கல்போர் பகுதியில் செயல்பட்டு வரும் பிரபல 'ஜகதம்பா' உணவகத்தில், உணவிற்கான கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்தியதை…