பீகார் மாநிலம் நலந்தா மாவட்டத்தில் வசித்து வரும் விகாஷ் குமார் என்பவர் ஐந்து வருடங்களுக்கு முன்பு சுனிதா (25) என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். திருமணம் முடிந்த பிறகு பிகாஷ் குமாருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி முதல் மனைவி இருப்பது அந்தப் பெண்ணுக்கு தெரிய வந்தது. முதல் மனைவியை விவாகரத்து செய்யாமல் இரண்டாவது திருமணம் செய்ததும் சுனிதாவுக்கு தெரிய வந்ததால் சுனிதா குடும்பத்தினர் அவரை சம்மதிக்க வைத்து விகாஸ் குமாருடன் வாழ வைத்துள்ளனர். இந்த தம்பதிகளுக்கு இரண்டு குழந்தைகள் பிறந்து அடுத்தடுத்து உயிரிழந்தன. இதனைத் தொடர்ந்து விகாஷ் குமார் தான் மற்றொரு பெண்ணை காதலிப்பதாகவும் அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் சுனிதாவிடம் கூறியுள்ளார்.
இதனால் ஏற்பட்ட சண்டையில் சுனிதா தன்னுடைய பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார். துர்கா பூஜையின் போது சுனிதா வீட்டுக்கு சென்று அவரை மீண்டும் தனது வீட்டுக்கு வருமாறு விகாஷ் கூறியுள்ளார். அப்போது ஏற்பட்ட தகராறியில் சுனிதா மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரித்துவிட்டார். இதனால் உடல் கருகி சம்பவ இடத்திலேயே சுனிதா பரிதாபமாக உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விகாஸ் குமாரை கைது செய்து விசாரித்து வரும் நிலையில் இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
