இன்றைய காலகட்டத்தில் பெண்களின் பாதுகாப்பு மற்றும் குடும்ப நம்பிக்கை என்பது சில ஆண்களால் சீரழிந்து விடுகிறது. கர்நாடக மாநிலத்தில் நடைபெற்ற ஒரு சம்பவம் தற்போது இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் பலகாவி மாவட்டம் அருகே உள்ள பகுதியில் வசித்து வரும் அவினாஷ் என்ற நபர் பல வருட திருமணத்திற்கு பிறகு பரஸ்பர நம்பிக்கையை துரோகம் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மனைவிக்கு தெரியாமல் வேறு ஒரு பெண்ணுடன் லாட்ஜில் தங்கி இருந்து அவர் கையும் களவுமாக சிக்கிக்கொண்டார்.
தனது கணவர் ஹோட்டல் அறையில் இருப்பதாக தகவல் அறிந்து மாமனாருடன் அங்கு சென்ற மனைவி கோபத்தில் கொந்தளித்து கணவரை லாட்ஜில் இருந்து இழுத்து நடுரோட்டில் செருப்பால் அடித்தார். தொடர்ந்து 150 முறை தொடர்ச்சியாக அடித்ததாக கூறப்படுகிறது. இதனை அங்கிருந்தவர்கள் அனைவரும் தடுக்காமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர். பெண்ணின் தந்தையும் ஆதரவாக நின்று அடித்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக அந்த பெண் எந்த புகார் அளிக்காத நிலையில் தற்போது இந்த சம்பவம் தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ಲವರ್ ಜೊತೆ ಲವ್ವಿಡವ್ವಿ – ಸಿಕ್ಕಾಕೊಂಡ ಗಂಡನಿಗೆ ಚಪ್ಪಲಿಯೇಟು!#wifehusband #Lover #IllegalRelationship #slapped #belgavi #KannadaNews #navasamajanews pic.twitter.com/IbiRbK3nEY
— navasamaja (@navasamajanews) October 28, 2025
