பிரேசில் நாட்டின் பரானா (Paraná) பகுதியில் நடைபெற்ற ஒரு குடும்ப விழாவின் போது, அடுத்த வீட்டுச் சுவரில் ஏறி எட்டிப்பார்த்த 31 வயதான புருனோ என்பவருக்கு நேர்ந்த கதி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அண்டை வீட்டிலிருந்து சண்டை சத்தமும் துப்பாக்கிச் சூடு சத்தமும் கேட்டதையடுத்து, அங்கு என்ன நடக்கிறது என்பதை அறியும் ஆவலில் புருனோ சுவரில் ஏறி எட்டிப்பார்த்துள்ளார். அவரது மனைவி ஆபத்தை உணர்ந்து அவரை கீழே இறங்குமாறு எவ்வளவோ கெஞ்சியும், புருனோ அதைப் பொருட்படுத்தாமல் ஆர்வத்தோடு எட்டிப்பார்த்தது அவரது உயிருக்கே உலையாக முடிந்தது.
அந்த நேரத்தில், அண்டை வீட்டுக்காரர் புருனோவை நோக்கி நேரடியாகத் துப்பாக்கியால் சுட்டுள்ளார். இதில் புருனோ சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கைதான அண்டை வீட்டுக்காரர், தான் யாரையும் குறிவைக்கவில்லை என்றும், சீரற்ற முறையில் (Randomly) சுட்டதாகவும் நீதிமன்றத்தில் வாதிட்டார். இருப்பினும், ஆதாரங்களின் அடிப்படையில் இது ஒரு திட்டமிட்ட கொலை என்று உறுதி செய்த நீதிமன்றம், அவருக்கு 19 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தது. தேவையற்ற ஆர்வம் மற்றும் விழிப்புணர்வு இல்லாத செயல் எப்படி ஒரு மனிதனின் உயிரைப் பறிக்கும் என்பதற்கு இந்தச் சம்பவம் ஒரு கசப்பான பாடமாக அமைந்துள்ளது.
Sometimes, nosiness comes at a high price.
During a family gathering in Paraná, Brazil, Bruno, 31, heard a fight and gunshots at his neighbor’s house.
Out of curiosity, he climbed over the wall to see what was happening, despite his wife’s attempts throughout the video to… pic.twitter.com/INxKbhDbjN
— Middle East News (@MiddleEast_Eng) April 24, 2026
