குற்றாலம் அருகே நடத்தையில் சந்தேகப்பட்டதால் காதல் மனைவியை கணவன் டீசல் ஊற்றி கொளுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மயிலாடுதுறை குத்தாலம் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த டாட்டா ஏஸ் சரக்கு வாகன டிரைவர் ஆதித்யன் (28) என்பவர் கடந்த ஐந்து வருடங்களுக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த பிரேமா (24) என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ள நிலையில் ஆதித்யன் வேறொரு பெண்ணுடன் பழகியதாக தெரிகிறது.
இதனால் ஆதித்யனின் நடவடிக்கையில் பிரேமா சந்தேகம் அடைந்ததால் கணவன் மனைவியிடையே அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டுள்ளது. நேற்று வழக்கம்போல தகராறு ஏற்பட்ட நிலையில் ஆத்திரமடைந்த ஆதித்யன் வீட்டிலிருந்த டீசலை எடுத்து பிரேமா மீது ஊற்றி தீ வைத்துள்ளார். இதனால் பிரேமா அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடிவந்து அவரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு 70% காயங்களுடன் பிரேமாவுக்கு தீவிரசிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில் போலீசார் வழக்கு பதிவு செய்து ஆதித்யனை கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
