மனைவியை அடித்து கொன்று இரவு முழுவதும் பிணத்துடன் கணவன் செய்த கொடூரம்… அதிகாலையில் குழந்தைகளுக்கு காத்திருந்த அதிர்ச்சி… சென்னையில் பயங்கரம்…!

Spread the love

போரூர் அருகே நடத்தையில் சந்தேகத்தால் மனைவியை கொடூரமாக அடித்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. போரூர் ஆர்இ நகர் பகுதியை சேர்ந்த சத்யராஜ் என்பவருடைய மனைவி ரோஸி ஹவுஸ்கீப்பிங் வேலை செய்து வந்துள்ளார். இவர்களுக்கு 9 வயதில் மூன்றாம் வகுப்பு படிக்கும் சூர்யா என்ற மகனும், ஏழு வயதில் இரண்டாம் வகுப்பு படித்து வரும் நித்தியா என்ற மகளும் உள்ளன. இதனிடையே ரோஸி நேற்று முன்தினம் பேச்சு மூச்சு இல்லாமல் வீட்டில் மயங்கிய நிலையில் இருந்து உள்ளார்.

தாய் தூங்கிக் கொண்டிருக்கிறார் என்று நினைத்த பிள்ளைகள் இருவரும் பள்ளி விடுமுறை என்பதால் விளையாடச் சென்றுள்ளனர். பிறகு அருகில் உள்ள தாயின் சகோதரி வீட்டுக்குச் சென்று தாய் தந்த இடையே இரவு தகராறு ஏற்பட்ட விவரத்தை கூறினர். இதனால் சந்தேகம் அடைந்த அவர்கள் விரைந்து சென்று மயங்கி கிடந்த ரோசியை அக்கம் பக்கத்தினர் உதவியுடன் மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இது பற்றி தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் நடத்திய விசாரணையில் கணவன் மனைவியிடையே ஏற்பட்ட தகராறில் ரோஸியை அடித்து கொலை செய்துவிட்டு சத்யராஜ் தப்பி சென்றது தெரியவந்தது. இதனிடையே மதுரவாயல் அடுத்த ஆலப்பாக்கம் பகுதியில் சுற்றித்திரிந்த சத்தியராஜை போலீசார் கைது செய்தனர். சத்யராஜுக்கு குடிப்பழக்கம் இருந்ததால் தினமும் வேலை முடிந்து மது போதையில் வீட்டுக்கு வருவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். மனைவி நடத்தையில் சந்தேகப்பட்டு அடிக்கடி அவருடன் தகராறு செய்து வந்த நிலையில் கடந்த 24ஆம் தேதி இரவு மது போதையில் வீடு திரும்பிய சத்தியராஜ் வழக்கம் போல மனைவியுடன் தகராறு செய்துள்ளார்.

அப்போது திடீரென்று ரோஸியின் தலையை பிடித்து சுவற்றில் மோதியபடி ஆக்ரோஷமாக தாக்கினார். இதில் மயங்கி விழுந்த அவர் துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். பின்னர் யாருக்கும் சந்தேகம் வரக்கூடாது என்பதால் இரவு முழுவதும் மனைவியின் பிணத்துடனே தங்கி இருந்த சத்யராஜ் காலையில் வேலைக்கு செல்வது போல தப்பி சென்றது விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

Nanthini

Recent Posts

“106 சீட்கள்.. இன்னும் 13 தான் பாக்கி” திரைமறைவில் நடக்கும் மெகா டீல்.. தவெக-விற்கு ஆதரவாக காங்கிரஸ்… தமிழக அரசியலில் உச்சகட்ட பரபரப்பு..!!

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் 106 இடங்களை வென்று தமிழக வெற்றிக் கழகம் மிகப்பெரிய கட்சியாக உருவெடுத்துள்ளது. இருப்பினும், அக்கட்சியின்…

6 மணத்தியாலங்கள் ago

அமைதியாக வந்து அரியணையைத் தூக்கிய அணில்கள்! ஸ்டாலினையே வீழ்த்திய விஜய்யின்

2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) நிகழ்த்தியுள்ள சாதனை, பல தசாப்த கால…

7 மணத்தியாலங்கள் ago

“வேலை செய்யும் இடத்திற்கே வந்து” கணவர் செய்த அந்த காரியம்… மேடையிலேயே பகிர்ந்த மனைவி… கொந்தளிக்கும் நெட்டிசன்கள்..!!

பிரபல தொலைக்காட்சியில் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் 'தமிழா தமிழா' நிகழ்ச்சியில், இந்த வாரம் "கணவன் மனைவி இடையே Personal Space…

9 மணத்தியாலங்கள் ago

BREAKING: இன்னும் சற்று நேரத்தில் பதவியை ராஜினாமா செய்கிறார் ஸ்டாலின்..!!

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளில் திமுக தோல்வி முகத்தில் இருக்கும் நிலையில், அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தனது முதல்வர் பதவியை…

9 மணத்தியாலங்கள் ago

“எவ்வளவு தான் பொறுத்துக்கொள்வேன்? காதலனைச் சுட்டுக்கொன்ற தாய்… 10 வயது மகளுக்கு 2 ஆண்டாக நடந்த பயங்கரம்… உறைந்து போன போலீஸ்..!!

திருமணமான நேஹா என்ற பெண், கடந்த இரண்டு ஆண்டுகளாகத் தனது கணவரைப் பிரிந்து அர்ஜுன் என்ற காதலனுடன் 'லிவ்-இன்' உறவில்…

9 மணத்தியாலங்கள் ago

திராவிட அரசியலில் மெகா அதிரடி..! திமுக – அதிமுக கைகோர்க்குமா..? தொங்கு சட்டசபை கொடுத்த ஷாக் ரிப்போர்ட்..!!

2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் எவ்வித எதிர்பாராத திருப்பங்களையும் ஏற்படுத்தலாம் எனக் கணிக்கப்படும் நிலையில், ஆளும் திமுக மற்றும்…

10 மணத்தியாலங்கள் ago