திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள கொசவபட்டி தனுஷ்கோடி காலனி பகுதியில் செந்தமிழ் செல்வன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவரும் பழனி அருகே உள்ள கஞ்சநாயக்கன்பட்டி பகுதியை சேர்ந்த சௌமியா என்ற பெண்ணும் கடந்த சில வருடங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதிகளுக்கு தற்போது மூன்று வயதில் ஒரு பெண் குழந்தையும் உள்ளது. இதனிடையே செந்தமிழ்செல்வனும் அவருடைய பக்கத்து வீட்டில் வசிக்கும் 23 வயதுடைய ஸ்டாலின் என்பவரும் நண்பர்களாக பழகியுள்ளனர்.
ஸ்டாலின் செந்தமிழ் செல்வன் உடன் பேச அவரை அழைப்பதற்கு என அடிக்கடி வீட்டுக்கு வந்து சென்றுள்ளார். அப்போது ஸ்டாலினுக்கும் செந்தமிழ்செல்வனின் மனைவி சௌமியாவுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு அது கள்ளக்காதலாக மாறியுள்ளது. இதனைத் தொடர்ந்து சௌமியா ஸ்டாலின் உடன் மணிக்கணக்கில் செல்போனில் குறுஞ்செய்தி அனுப்பியும் போன் செய்தும் பேசி வந்துள்ளார். இதனை அறிந்த செந்தமிழ் செல்வன் அவருடைய மைத்துனர் மற்றும் மைத்துனரின் நண்பர்களுடன் சேர்ந்து ஸ்டாலினை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார்.
அதன்படி ஸ்டாலினை மது அருந்த செந்தமிழ் செல்வன் அழைத்துள்ளார். அவரும் மது அருந்த சென்ற நிலையில் இவர்களின் நடவடிக்கையை பார்த்து தனக்கு ஆபத்து என்று புரிந்து கொண்ட ஸ்டாலின் அந்த இடத்திலிருந்து தப்பித்துச் சென்றுள்ளார். தொடர்ந்து காவல் நிலையத்திற்கு சென்ற ஸ்டாலின் தனது உயிருக்கு ஆபத்து என எழுதி கொடுத்ததாக கூறப்படுகிறது. நடவடிக்கை எடுப்பதாக கூறி போலீசார் அவரை வீட்டுக்கு அனுப்பியுள்ளனர். இரவு வீட்டுக்கு வந்த ஸ்டாலின் உறங்கிக் கொண்டிருந்தபோது அவர் என் வீட்டிற்கு சென்ற செந்தமிழ் செல்வன் அவரது மைத்துனர் ஆகியோர் ஸ்டாலின் மற்றும் அவரது தந்தை பெரியசாமியை அரிவாள் மற்றும் கத்தியால் தலை மற்றும் கழுத்தில் கடுமையாக தாக்கியுள்ளனர்.
இதனால் பலத்த காயம் அடைந்த ஸ்டாலின் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பெரியசாமிக்கு வெட்டு காயம் ஏற்பட்டதால் அவரின் அளவை சத்தம் கேட்ட ஸ்டாலினின் இன் தம்பி வெங்கடேஷ் அங்கிருந்து தப்பி சென்றுள்ளார். உடனே அக்கம் பக்கத்தினர் போலீசுக்கு தகவல் தெரிவித்த நிலையில் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ஸ்டாலினின் உடலை கைப்பற்றி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அதே சமயம் அவருடைய தந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனைத் தொடர்ந்து வழக்கு பதிவு செய்த போலீசார் சம்பவத்தில் தொடர்புடையவர்களை கைது செய்து விசாரித்து வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது
