“அட கடவுளே… எப்ப பார்த்தாலும் போன் ஏன் பிஸி?… சந்தேகத்தால் சீரழிந்த வாழ்க்கை… 3 பிஞ்சு சிறுமிகளைத் தவிக்கவிட்டு… தாயைக் கொன்ற கொடூரம்… ஈரோட்டில் பயங்கரம்…!”

By Swetha on ஆடி 27, 2026

Spread the love

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமைச் சேர்ந்த 24 வயதான ரெபேக்கா என்பவருக்கும், ராமேஸ்வரத்தைச் சேர்ந்த பாகப்பிரகாஷ் (36) என்பவருக்கும் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி, 3 பெண் குழந்தைகள் உள்ளனர். கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட குடும்பத் தகராறு காரணமாக, ரெபேக்கா தனது குழந்தைகளுடன் பவானிசாகர் அருகே வாடகை வீட்டில் தனியாக வசித்து வந்தார். மனைவியை மீண்டும் குடும்பம் நடத்த அழைத்தபோது ரெபேக்கா வர மறுத்ததோடு, அவரது செல்போன் அடிக்கடி பிஸியாக இருந்ததால் பாகப்பிரகாஷுக்கு அவர் மீது தீவிர சந்தேகம் ஏற்பட்டது.

இந்த ஆத்திரத்தில் மனைவியைக் கொல்லத் திட்டமிட்ட பாகப்பிரகாஷ், ராமேஸ்வரத்தில் இருந்து கத்தியை வாங்கி மறைத்துக்கொண்டு பவானிசாகரில் உள்ள ரெபேக்காவின் வீட்டிற்கு வந்துள்ளார். அங்கிருந்த குடும்பத்தினர் மற்றும் குழந்தைகளிடம் அன்பாகப் பேசியவர், அறைக்குள் சென்று மீண்டும் மனைவியிடம் குடும்பம் நடத்த வருமாறு கெஞ்சியுள்ளார். ரெபேக்கா தனது முடிவில் உறுதியாக மறுத்ததால், ஆத்திரமடைந்த பாகப்பிரகாஷ் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் அவரைச் சரமாரியாகக் குத்திக் கொடூரமாகக் கொலை செய்தார்.

   

அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த பெற்றோர் மற்றும் அக்கம் பக்கத்தினர் தப்பியோட முயன்ற பாகப்பிரகாஷைப் பிடித்து பவானிசாகர் காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். உடலைக் கைப்பற்றிய போலீசார் சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பாகப்பிரகாஷ் மீது கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். சந்தேகப் பேயால் தாய் உயிரிழந்து, தந்தை சிறை சென்றதால் 3 பிஞ்சு பெண் குழந்தைகளும் ஆதரவற்றுத் தவிக்கும் இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.