கடைசி வரை போராடிய மகள்…! நடுரோட்டில் இளம்பெண்ணை 11 முறை கத்தியால் குத்திய கணவர்…. பரிதவிக்கும் 2 பிள்ளைகள்…. பரபரப்பு சம்பவம்…!!

By Devi Ramu on புரட்டாதி 24, 2025

Spread the love

கர்நாடக மாநிலம் ஹாசன் பகுதியைச் சேர்ந்த ரேகா கால் சென்டரில் வேலை பார்த்து வந்துள்ளார். இவரது கணவர் லோஹித்ஷ்வா. இருவருக்குமே இது இரண்டாவது திருமணம். இந்த தம்பதிக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர். ரேகா வேலை பார்க்கும் நிறுவனத்தில் அவரது கணவர் கார் டிரைவராக வேலை பார்த்து வந்துள்ளார். சம்பவம் நடந்த அன்று அப்பகுதியில் உள்ள பேருந்து நிலையம் அருகே சாலையை கடப்பதற்காக ரேகா தனது மகளுடன் காத்துக் கொண்டிருந்தார்.

அப்போது லோஹித்ஷ்வா அங்கு வந்து தனது மனைவியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு, தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் அவரை கொடூரமாக 11 முறை குத்தினார். அருகில் நின்ற மகள் தாயை காப்பாற்ற முயற்சி செய்தும் அவரால் முடியவில்லை. இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ரேகாவின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் லோஹித்ஷ்வாவை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.