தெலுங்கானா மாநிலத்தில் இரண்டு குழந்தைகளின் தாய் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டு பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானா மாநிலம் ராயவரம் கிராமத்தை சேர்ந்த சைலம் என்பவர் ஸ்ராவணி என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார். இதனைத் தொடர்ந்து காதலர்கள் இருவரும் கடந்த 2014 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட நிலையில் இந்த தம்பதியினருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளது. இந்நிலையில் தன்னுடைய அக்கா கணவருடன் கள்ளத்தொடர்பில் இருந்து வந்த ஸ்ராவணி ஒரு கட்டத்தில் தன்னுடைய கணவன் மற்றும் குழந்தைகளை தவிக்க விட்டு மச்சானுடன் ஓடிவிட்டார்.
பிறகு கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு மனம் திருந்தியா எவ்வாறு தன்னுடைய கணவருடன் சேர்ந்து வாழ விருப்பம் தெரிவித்துள்ளார். இதனை ஏற்றுக் கொண்ட சைலம் தன்னுடைய மனைவியுடன் மீண்டும் சேர்ந்து வாழ்ந்து வந்த நிலையில் மனைவி அடிக்கடி செல்போனில் பேசுவதையும் சார்ஜ் செய்வதையும் பார்த்து சந்தேகம் அடைந்துள்ளார். இதனால் மனைவியை அடித்து துன்புறுத்து என் நிலையில் தனது குழந்தைகளை அழைத்துக் கொண்டு ஸ்ராவணி தாய் வீட்டுக்கு சென்று விட்டார். இதனைத் தொடர்ந்து தன்னுடைய மனைவியை சமாதானம் செய்து வீட்டுக்கு சைலம் அழைத்து வந்துள்ளார்.
அவர்கள் வீட்டிற்கு செல்லும் வழியில் இருந்த காட்டுப்பகுதியில் இறங்கி பழம் பறித்து செல்லலாம் என்று கூறிய சைலம் மனைவியை ஆளில்லாத இடத்திற்கு அழைத்துச் சென்று அவருடைய கழுத்தை துப்பட்டாவால் இறுக்கி கத்தியால் குத்தி கொலை செய்த பிறகு இறந்த சடலத்தை பெட்ரோல் ஊற்றி எரித்துள்ளார். பிறகு இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தியதில் குற்றவாளி சைலத்தை கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, சென்னை கொளத்தூர் தொகுதியில் தனக்கு வாக்களித்த மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவிக்கும்…
தமிழக சட்டமன்றத் தேர்தலில் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) 108 இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள நிலையில், ஆட்சியை…
பிரபல தயாரிப்பாளரும் நடிகர் ஜீவாவின் தந்தையுமான ஆர்.பி.சௌத்ரி, ராஜஸ்தானில் ஏற்பட்ட சாலை விபத்தில் உயிரிழந்தார் என்ற செய்தி திரையுலகினரிடையே பெரும்…
தவெக தலைவர் விஜய்யின் ஆஸ்தான ஜோதிடராகக் கருதப்படும் ரதன் பண்டிட், தனியார் செய்தி நிறுவனம் ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டி அரசியல்…
தமிழக அரசியலில் யாரும் எதிர்பாராத மாபெரும் மாற்றமாக, 2026 சட்டமன்றத் தேர்தலில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 108…
தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க.வின் கோட்டையாகக் கருதப்பட்ட பல இடங்கள் தகர்க்கப்பட்டு, தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களுடன் ஆட்சியமைக்க…