மத்திய பிரதேசம் மாநிலம் குவாலியர் பகுதியை சேர்ந்த அரவிந்த் மற்றும் நந்தினி தம்பதியினருக்கு கடந்த 2023 ஆம் ஆண்டு திருமணம் நடந்துள்ளது. இவர்களுக்கிடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்ட வந்த நிலையில் நந்தினிக்கு அன்குஷ் பதக் என்ற நபருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. சமீபத்தில் அவரின் பிறந்தநாள் பார்ட்டிக்கு நந்தினி சென்றிருந்த நிலையில் அங்கு எடுக்கப்பட்ட வீடியோவை பேஸ்புக்கில் நந்தினி பதிவிட்டுள்ளார். இதனை பார்த்து அரவிந்துக்கு கோபம் வந்த நிலையில் நேற்று நந்தினி, அன்குஷ், அவரது நண்பர்கள் கல்லு ஆகிய மூன்று பேரும் ஆட்டோவில் சென்று கொண்டிருந்தனர்.
இதனை நந்தினியின் கணவர் அரவிந்த் பார்த்து கோபமடைந்து மற்றொரு ஆட்டோவில் அவர்களை துரத்திச் சென்று மடக்கிப் பிடித்தார். பிறகு யாரும் எதிர்பார்க்காத வகையில் திடீரென்று அரவிந்த் தன்னிடம் இருந்த துப்பாக்கியை எடுத்து நந்தினி நோக்கி சுட்டார். இது குறித்து தகவல் அறிந்து உடனே சம்பவ இடத்திற்கு போலீசார் வந்ததும் போலீசாரை நோக்கி துப்பாக்கியை நீட்டி அரவிந்த் மிரட்டியுள்ளார். இருந்தாலும் போலீசார் அவரை மடக்கிப்பிடித்து கைது செய்தனர். துப்பாக்கி சூட்டில் படுகாயம் அடைந்த நந்தினி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
மனைவி மீது ஏற்பட்ட சந்தேகத்தால் கணவர் பட்டப்பகலில் இந்த கொலை சம்பவத்தை அரங்கேற்றியதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. அதேசமயம் நந்தினியை திருமணம் செய்து கொள்வதற்கு முன்னதாக அரவிந்துக்கு ஏற்கனவே மற்றொரு பெண்ணுடன் திருமணமாகி ஒரு குழந்தையும் இருந்துள்ளது. இந்த உண்மை நந்தினிக்கு தெரிய வந்தபோது அவர் இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன் பிறகு நந்தினி மீது அரவிந்துக்கு கோபம் ஏற்பட்டதால் ஒருமுறை நந்தினி மீது கார் ஏற்றி கொலை செய்யவும் முயற்சித்துள்ளார். இந்த புகாரி அடிப்படையில் அரவிந்தை போலீசார் கைது செய்துள்ள நிலையில் இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் கிளப்பியுள்ளது.
