உத்தரப் பிரதேச மாநிலம் ஃபதேபூர் பகுதியைச் சேர்ந்த திலீப் யாதவ் என்ற அரசுப் பள்ளி ஆசிரியர், தனியார் பள்ளியில் ஆசிரியையாகப் பணியாற்றி வந்த தனது மனைவி சிவானியின் நடத்தையில் நீண்ட நாட்களாகச் சந்தேகம் கொண்டு வந்துள்ளார். இவர்களுக்கு 8 வயதில் ஒரு மகன் உள்ள நிலையில், இந்தச் சந்தேகத்தின் காரணமாக இருவருக்கும் இடையே அடிக்கடி கடுமையான குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இந்நிலையில், வீட்டின் முற்றத்தில் சிவானி பாத்திரங்களைக் கழுவிக் கொண்டிருந்த போது, பின்னால் வந்த திலீப் யாதவ் ஆத்திரத்தில் பிரஷர் குக்கரை எடுத்து சிவானியின் தலையில் ஓங்கி அடித்துள்ளார். இதில் நிலைதடுமாறி விழுந்த சிவானியின் தலையைத் தண்ணீருக்குள் பலவந்தமாக அமுக்கி, மூச்சுத்திணற வைத்து கொடூரமாகக் கொலை செய்துள்ளார்.
இச்சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த காவல் துறையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சிவானியின் சடலத்தைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், மனைவியைக் கொடூரமாகக் கொலை செய்த அரசுப் பள்ளி ஆசிரியர் திலீப் யாதவைக் காவல்துறையினர் உடனடியாகக் கைது செய்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள சாமக்கால் கடற்கரையில், சமூக வலைதளங்களில் 'ரீல்ஸ்' வீடியோ பதிவேற்றுவதற்காக எடுக்கப்பட்ட சாகச முயற்சி…
பொதுமக்கள் நடமாட்டம் மிகுந்த தெருவில், இளம் பெண் ஒருவரை திடீரென தேனீக்கள் கூட்டம் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…
கொட்டாரக்கரை தமராசேரி முக்கு அருகே வியாழக்கிழமை மாலை எதிரே வந்த கன்டெய்னர் லாரியும் ஆம்னி வேனும் நேருக்கு நேர் மோதி…
சுல்தான்பூர் மாவட்டம் அம்ஹத் சௌக் பகுதியில், தொழிலதிபர் ஷஷாங்க் கெளஷலை பேருந்து நிலையத்தில் இறக்கிவிடுவதாகக் கூறி காரில் ஏற்றியுள்ளனர். அம்ஹத்…
ஜம்முவின் ஜானிபூர் பகுதியில் உள்ள லோயர் ரூப் நகர் சாலையில் நீரஜ் என்ற வாலிபர், தனது தம்பி ரிஷு மற்றும்…
தன் மனைவி வைஷ்ணவியைக் கொலை செய்த வழக்கில் பிணையில் வெளியே வந்த ஹரிபாபு என்ற நபர், நிஜாமாபாத் ஆர்.ஆர் எக்ஸ்…