கேரள மாநிலம் திருவனந்தபுரம் கரக்குளத்தை சேர்ந்த பாசுரன் ஆசாரி (73) என்பவருடைய மனைவி ஜெயந்தி (63) கடந்த 9 நாட்களாக சிறுநீரக பாதிப்பால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதற்காக தனியார் மருத்துவமனையில் ஜெயந்தி சிகிச்சை பெற்று வந்தார். அவரை கணவர் தான் உடனிருந்து கவனித்தார். உடல்நிலை சரியில்லாமல் மனைவி அவதிப்படுவதை பார்த்து மிகுந்த மனவேதனை அடைந்த பாசுரன் ஆசாரி, நேற்று அதிகாலை 3 மணிக்கு அதே மருத்துவமனையின் ஐந்தாவது மாடியில் இருந்து கீழே குதித்தார். இதில் பலத்த காயமடைந்த அவரை மருத்துவ ஊழியர்கள் மீட்டு சிகிச்சை அளித்த நிலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இதனைத் தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற ஜெயந்தியும் மின் வயரால் கழுத்து இருக்கப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார்.. இதனைக் கண்டு மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பிறகு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து தீவிர விசாரணை நடத்தியதில், உடல்நிலை சரியில்லாமல் அவதிப்பட்ட மனைவியை பாசுரன் ஆசாரி கொன்றுவிட்டு மாடியில் இருந்து அவரும் கீழே குதித்து உயிரை மாய்த்துக் கொண்டது தெரிய வந்தது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில் இந்த துயர சம்பவம் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகே நிகழ்ந்த கோர விபத்தில் இரண்டு லாரி ஓட்டுநர்கள் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியாகினர்.…
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், வேற்றுகிரகவாசிகள் (Aliens) மற்றும் அடையாளம் தெரியாத பறக்கும் பொருட்கள் (UFO) குறித்த ரகசிய ஆவணங்களை…
திருப்பூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உரையாற்றிய தருணத்தைக் காட்டுகிறது. மத்தியில் ஆளும் பாஜக அரசு கொண்டு வந்த…
ராஜஸ்தான் மாநிலம் அல்வார் மாவட்டம் ராஜ்கர் பகுதியில் டெல்லி-மும்பை எக்ஸ்பிரஸ்வேயில் நடந்த கோர விபத்து, ஒரு குடும்பத்தையே சிதைத்துள்ளது. இந்த…
சமூக வலைதளங்களில் ஒரு இளம்பெண் உணவகத்தில் உள்ள 'மெனு' (Menu) கார்டுக்கு ஒரு விசித்திரமான மற்றும் நகைச்சுவையான விளக்கத்தைக் கொடுக்கும்…
ராஜஸ்தான் மாநிலம் அல்வார் மாவட்டம் ராஜ்கர் பகுதியில் தாயே தனது 4 வயதுப் பெண் குழந்தையை கழுத்தை நெரித்துக் கொன்ற…