“இரவில் மது விருந்து…” மனைவியை கொன்று இரவோடு இரவாக உடலை எரிக்க முயன்ற கணவர்…. குடும்ப தகராறில் பயங்கரம்…. நெஞ்சை உலுக்கும் பகீர் சம்பவம்…!!

Spread the love

ஈரோடு மாவட்டம் சித்தோடு அருகே குடிபோதையில் ஏற்பட்ட தகராறில், மனைவியை அடித்துக் கொன்றுவிட்டுச் சடலத்தை யாருக்கும் தெரியாமல் இரவோடு இரவாக அடக்கம் செய்ய முயன்ற கணவரை காவல்துறையினர் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். ஈரோடு மாவட்டம் சித்தோடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நசியனூர் காரைவாய்க்கால் புதூர் பகுதியைச் சேர்ந்தவர்கள் நாகராஜ் – ராஜேஸ்வரி (38) தம்பதியினர். இருவரும் தறிப்பட்டறையில் கூலி வேலை செய்து வந்த நிலையில், கடந்த அக்டோபர் 18 அன்று இரவு இருவரும் சேர்ந்து மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில் நாகராஜ் தனது மனைவியைத் தாக்கியுள்ளார்.

இதில் தலை மற்றும் கழுத்தில் பலத்த காயமடைந்த ராஜேஸ்வரி வீட்டின் அருகே இருந்த ஆட்டுக் கொட்டகையில் பரிதாபமாக உயிரிழந்தார். இறப்பை மறைக்க முயன்ற கணவர் நாகராஜ் மற்றும் குடும்பத்தினர் உடலை ரகசியமாக எரிக்க முயன்ற தகவல் கசிந்ததை அடுத்து, சித்தோடு போலீசார் விரைந்து சென்று ராஜேஸ்வரியின் உடலைக் கைப்பற்றி உடற்கூறாய்விற்காகப் பெருந்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். நாகராஜைக் கைது செய்துள்ள போலீசார், இக்கொலையில் வேறு யாருக்கேனும் தொடர்பு உள்ளதா என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Devi Ramu

Recent Posts

“ஒரே நொடியில் பயங்கரம்…” சேலம் தேசிய நெடுஞ்சாலையில் அடுத்தடுத்து பறிபோன உயிர்கள்… சோஷியல் மீடியாவில் தீயாய் பரவும் அதிர்ச்சி வீடியோ…!!

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள தேசிய நெடுஞ்சாலையில், ஒரே வாரத்திற்குள் பள்ளிப் பேருந்துகள் மோதிய விபத்தில் இருவர் உயிரிழந்த…

41 minutes ago

“அது வாய் தவறி வந்த வார்த்தை…” கிரிமினலுக்கு ‘சாப்’ மரியாதையா…? வீடியோவால் வெடித்த சர்ச்சை… புது விளக்கம் கொடுத்த டெல்லி போலீசார்…!!

பிரபல ரவுடி லாரன்ஸ் பிஷ்னோியை டெல்லி காவல்துறை அதிகாரி ஒருவர் 'சாப்' என்று மரியாதையாக அழைக்கும் பழைய வீடியோ ஒன்று…

1 மணத்தியாலம் ago

மரத்தில் மோதி தீப்பிடித்த விமானம்…! 2 மகள்களுடன் உள்ளே சிக்கிய பெற்றோர்… துணிச்சலாக மீட்ட மக்கள்…. இணையத்தில் குவியும் பாராட்டு மழை…!!

அமெரிக்காவின் ப்ளோரிடா மாகாணம் பெம்பிரோக் பைன்ஸ் பகுதியில், தாய், தந்தை மற்றும் இரண்டு இளம் மகள்களுடன் சென்றுகொண்டிருந்த சிறிய ரக…

1 மணத்தியாலம் ago

அடச்சீ… கொஞ்சம் கூட மனசாட்சி இல்லையாடா?… வாயில்லா ஜீவனைத் துடிதுடிக்கத் துன்புறுத்தும் மனித மிருகங்கள்… இணையத்தில் வைரல் வீடியோவால் கொந்தளிக்கும் நெட்டிசென்கள்…!!

வாயில்லா ஜீவன்கள் மீது சில மனிதர்கள் காட்டும் வன்முறை மற்றும் துன்புறுத்தல்கள் சமூகத்தில் பெரும் வேதனையையும் கவலையையும் ஏற்படுத்துகின்றன. இதுபோன்ற…

2 மணத்தியாலங்கள் ago

“அவனுடன் சேர்ந்து வாழ ஆசை…” கணவரை கொன்று விபத்து என நாடகமாடிய மனைவி… முடிவுக்கு வந்த 10 ஆண்டுகால திருமண வாழ்க்கை… பரபரப்பு சம்பவம்…!!

கர்நாடக மாநிலம் விஜயபுராவில், காலை நடைப்பயிற்சி சென்ற கணவரைக் கள்ளக்காதலனுடன் சேர்ந்து எஸ்யூவி காரால் மோதிக் கொன்று, அதைச் சாலை…

2 மணத்தியாலங்கள் ago