” இவன் யாரடி?” கழுத்தில் இறங்கிய கத்தரிக்கோல்.. துடிதுடித்து இறந்த கர்ப்பிணி.. ஆடிட்டர் கணவனின் வெறிச்செயலுக்குப் பின்னால் இருக்கும் அதிர்ச்சிப் பின்னணி…!!

By Soundarya on மாசி 18, 2026

Spread the love

உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத்தில் ஆடிட்டராக (CA) பணிபுரியும் நபீத், தனது 7 மாத கர்ப்பிணி மனைவி ஸைனப்பை கத்தரிக்கோலால் குத்திக் கொலை செய்துள்ளார். காதலர் தினத்தை (பிப்ரவரி 14) முன்னிட்டு, இருவரும் மகிழ்ச்சியாக வெளியில் சென்று கொண்டாடிவிட்டு வீடு திரும்பிய நிலையில், அடுத்த சில மணிநேரங்களிலேயே இந்த கொடூரக் கொலை நடந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொலைக்கான காரணம் குறித்துப் போலீஸார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், தம்பதியினரிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது தெரியவந்தது. சம்பவத்தன்று இரவு, ஸைனப் தனது செல்போனைப் பார்த்துக்கொண்டிருந்தபோது, அதில் ஒரு குறிப்பிட்ட நபருடன் நீண்ட நேரம் உரையாடியதாகக் கூறி நபீத் சந்தேகப்பட்டுள்ளார். இது தொடர்பாக இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றவே, ஆத்திரமடைந்த நபீத் வீட்டில் இருந்த தையல் கத்தரிக்கோலை எடுத்து ஸைனப்பின் கழுத்து மற்றும் உடலில் சரமாரியாகக் குத்தியுள்ளார்.

   

ரத்த வெள்ளத்தில் சரிந்த ஸைனப் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து, கொலையாளி நபீத் தானாகவே காவல் நிலையத்திற்குச் சென்று சரணடைந்தார். உயிரிழந்த பெண் 7 மாத கர்ப்பிணியாக இருந்ததால், பிறக்காத சிசுவும் இந்த கொடூரச் செயலால் உயிரிழந்தது அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. போலீஸார் நபீத்தைக் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர், மேலும் இந்த வழக்கில் வேறு ஏதேனும் பின்னணி உள்ளதா எனத் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.