“உன் பொண்ணு உயிரோட இருக்கணும்னா வீட்டுக்குவா ” பிரிந்து சென்ற மனைவியை வீட்டிற்கு வரவழைக்க… 15 வயது மகளை கொன்ற தந்தை… ஊரே உறைந்து போன சம்பவம்..!!

Spread the love

பட்டியாலாவின் ராஜ்புரா பகுதியில், தனது மனைவி குடும்பத் தகராறு காரணமாகப் பிரிந்து சென்றதால், ஆத்திரமடைந்த தந்தை தனது 15 வயது மகளைக் கொலை செய்துள்ள கொடூரச் சம்பவம் அரங்கேறியுள்ளது. குற்றம் சாட்டப்பட்ட தந்தைக்கும் அவரது மனைவிக்கும் இடையே கடந்த நீண்ட காலமாகத் தகராறு இருந்து வந்த நிலையில், இருவரும் கடந்த 3 ஆண்டுகளாகப் பிரிந்து வாழ்ந்து வந்துள்ளனர். தனது மனைவியைத் மீண்டும் தன்னுடன் வாழ வருமாறு அவர் தொடர்ந்து வற்புறுத்தி வந்ததாகத் தெரிகிறது.

மனைவி வீட்டிற்குத் திரும்பாவிட்டால் மகளைக் கொன்றுவிடுவேன் என்று அந்த நபர் பலமுறை மிரட்டி வந்துள்ளார். ஆனாலும் மனைவி வராததால், ஆத்திரத்தின் உச்சத்துக்கே சென்ற அவர், தனது மகள் மணீந்தர் கவுரைத் தூக்கிலிட்டுக் கொலை செய்ததாகக் கூறப்படுகிறது. மேலும், கொலையை மறைப்பதற்காக யாருக்கும் தெரியாமல் அவசர அவசரமாக மகளின் இறுதிச் சடங்குகளையும் அவரே முன்னின்று செய்து முடித்துள்ளார்.

கிராமத்தைச் சேர்ந்த ஒருவர் அளித்த தகவலின் பேரிலேயே தாய்க்குத் தனது மகளின் மரணம் குறித்துத் தெரியவந்தது. அவர் சம்பவ இடத்திற்கு விரைவதற்குள்ளேயே மகளின் உடல் எரிக்கப்பட்டிருந்தது. தனது கணவரும் அவரது குடும்பத்தினரும் திட்டமிட்டே தனது மகளைக் கொலை செய்து தூக்கிலிட்டதாக அந்தத் தாய் குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர், தப்பியோட முயன்ற அந்தத் தந்தையைக் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரு தந்தையே தனது மகளைக் கொலை செய்த இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Soundarya

Recent Posts

திக்.. திக்..! பைக் மீது பயங்கர மோதல்… திரும்பி கூட பார்க்காமல் எஸ்கேப் ஆன கார் ஓட்டுநர்… பதறவைக்கும் CCTV காட்சி…!!

கோலாப்பூர் – இச்சல்கரஞ்சி-கப்னூர் வழித்தடத்தில் உள்ள கப்னூர் சௌக் பகுதியில் அதிவேகமாக வந்த டாடா பஞ்ச் கார், முன்னால் சென்று…

6 மணத்தியாலங்கள் ago

“மகள் போனதும் ஆட்டம் ஆரம்பம்!”… பொறுமை இழந்த மனைவி… கொதித்து எழுந்த கோபம்… கணவன் மீது வீசப்பட்ட சூடான திரவம்… ரத்த உறைய வைக்கும் சம்பவம்…!!

உணவகத்தின் கலகலப்பான சத்தங்களுக்கு நடுவே, மேஜையின் நடுவில் வைக்கப்பட்டிருந்த ஹாட் பாட் பாத்திரம் மெல்லிய புகையுடன் கொதித்துக் கொண்டிருந்தது. தட்டிலிருந்த…

6 மணத்தியாலங்கள் ago

திக் திக்…! திடீரென மயங்கி விழுந்த 9 வயது சிறுமி… பள்ளியில் அரங்கேறிய அதிர்ச்சி… வைரலாகும் ஷாக்கிங் வீடியோ…!!

தலைநகர் டெல்லி மயூர் விஹார் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 3-ஆம் வகுப்பு படித்து வந்த 9 வயது சிறுமி…

6 மணத்தியாலங்கள் ago

என்னை கடத்திட்டாங்க…! சினிமா படத்தையே மிஞ்சிய சேசிங்… 12 கி.மீ. காரை விரட்டிப் பிடித்த போலீஸ்… சிக்கிய பெண் யார்?…!!

கேரளாவில் வெளிநாட்டிலிருந்து சட்டவிரோதமாகக் கடத்தி வரப்பட்ட பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கத்தைக் கவர்ந்து செல்ல, பெண் ஒருவர் திரைப்பட…

6 மணத்தியாலங்கள் ago

7 மாத கர்ப்பம்… வயிற்றில் 4 குழந்தைகள்… ஒரே இரவில் மாறிய தலைவிதி… மருத்துவமனையில் அடுத்தடுத்து நடந்த அதிரவைக்கும் சம்பவங்கள்…!!

உத்தரப் பிரதேச மாநிலம் புதௌன் மாவட்டத்தைச் சேர்ந்த கருலியா கிராமத்தைச் சேர்ந்தவர் ஏக்தா. ஏழு மாதக் கர்ப்பிணியாக இருந்த இவருக்குச்…

6 மணத்தியாலங்கள் ago

“பலமுறை கருக்கலைப்பு…” 10 ஆண்டுகளாக நம்பி ஏமார்ந்த இளம்பெண்… போலீஸ் வேலை கிடைத்ததும் கம்பி நீட்டிய காதலன்… பகீர் பின்னணி…!!

உத்தரப் பிரதேச மாநிலத்தில் 11-ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போதே காதலிப்பதாகக் கூறி, 10 ஆண்டுகள் அத்துமீறலில் ஈடுபட்டு ஏமாற்றிய…

6 மணத்தியாலங்கள் ago