ஹரியானா மாநிலம் குருகிராமில், காதலித்துத் திருமணம் செய்துகொண்ட காஜல் என்பவரை அவரது கணவர் அருண் சர்மா ஊசி மூலம் விஷம் ஏற்றிப் படுகொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. போதைப்பழக்கத்திற்கு அடிமையான அருண், தனது மனைவியிடம் பணம் கேட்டு அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார். இதனால் ஏற்பட்ட தகராறு காரணமாக காஜல் தனது தாய் வீட்டிற்குச் சென்ற நிலையில், அங்கேயே வந்து தங்கிய அருண், கடந்த மார்ச் 18 அன்று நயவஞ்சகமாக ஊசி போட்டு மனைவியைக் கொன்றுவிட்டுத் தப்பியோடியுள்ளார்.
மருத்துவமனையில் பணியாற்றியபோது ஏற்பட்ட நட்பால் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்புதான் இவர்களது திருமணம் நடைபெற்றுள்ளது. திருமணத்திற்குப் பிறகு கணவரின் போதைப்பொருள் பழக்கம் தெரியவந்ததால் இருவருக்கும் இடையே மோதல் வலுத்துள்ளது. தற்போது உயிரிழந்த பெண்ணின் மூக்கிலிருந்து இரத்தம் வழிந்த நிலையில் சடலமாகக் மீட்கப்பட்டார்; சம்பவ இடத்திலிருந்து பயன்படுத்தப்பட்ட ஊசி ஒன்றையும் போலீசார் கைப்பற்றியுள்ளனர். தலைமறைவாக உள்ள கொலையாளி அருணைப் பிடிக்கத் தனிப்படை அமைக்கப்பட்டுத் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
"தாயன்பின் ஆழத்தை அளவிட முடியாது" என்பதற்குச் சான்றாக, ஒரு தாயின் போராட்டத்தை விவரிக்கும் நெகிழ்ச்சியான வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி…
"என் தற்கொலை குறிப்பை யார் வாசித்தாலும் அதை முழுமையாக வாசியுங்கள்; எனது இறப்பிற்குப் பிறகு என் தந்தை எனது உடலைத்…
ஈரானுடனான போரில் திடீர் திருப்பமாக, போர்நிறுத்த காலத்தை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் காலவரையின்றி நீட்டித்துள்ளார். ஆரம்பத்தில் ஈரானை மிரட்டி…
துபாயைச் சேர்ந்த 23 வயது இளம்பெண்ணான சாரா, எவ்வித விலையுயர்ந்த மருத்துவ சிகிச்சைகளும் இன்றி தனது முகப்பருக்களைக் குணப்படுத்திய ரகசியத்தைப்…
தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகைக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை எவ்வித சோதனையும் நடத்தவில்லை என்று அந்தத் துறை…
நடுத்தர வர்க்கக் குடும்பம் ஒன்று முதன்முறையாக ஏசி (AC) வாங்கியபோது, அந்த வீட்டின் தாய் காட்டிய நெகிழ்ச்சியான எதிர்வினை குறித்த…