நேபாளத்தில் ஏற்பட்ட கொடூரமான வெள்ளப் பேரழிவிற்குப் பிறகு, பல நாட்களாகக் காணாமல் போன மனைவி உயிருடன் மீண்டு வந்து கணவரிடம் திரும்பியுள்ளார். மனைவி பத்திரமாகத் திரும்பியதைக் கண்ட கணவன், தனது மகிழ்ச்சியையும் உணர்ச்சிகளையும் கட்டுப்படுத்த முடியாமல் கண்ணீர் விட்டு கதறி அழுத்துள்ளார். பல நாட்களாக மனைவியைப் பற்றிய எந்தவொரு தகவலும் கிடைக்காத நிலையில், அவர் உயிருடன் திரும்பியது அக்குடும்பத்திற்குப் ஆறுதலைத் தந்துள்ளது.
இருப்பினும், இவர்களின் குழந்தைகள் இன்னும் மீட்கப்படாமல் காணாமல் போனோர் பட்டியலிலேயே இருப்பது அக்குடும்பத்தை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. ஒரு பக்கம் மனைவி மீண்டதில் மகிழ்ச்சியும், மறுபக்கம் குழந்தைகள் கிடைக்காததில் பேரதிர்ச்சியும் எனத் தவிக்கும் இக்குடும்பத்திற்குப் பலரும் ஆறுதல் கூறி, குழந்தைகள் பத்திரமாக மீட்கப்பட வேண்டும் எனப் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.
