உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ராவில் உள்ள தாஜ்கஞ்ச் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஹோட்டல் ஒன்றில், திருமணமான நபர் ஒருவர் தனது காதலியுடன் தங்கியிருந்ததை அவரது மனைவி கையும் களவுமாக கண்டுபிடித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மனைவி ஹோட்டலுக்குள் நுழைந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், நிலைமையைச் சமாளிக்க அந்த நபர் தனது காதலியை ஹோட்டலிலிருந்து வெளியே அழைத்துச் சென்றுள்ளார்.
இருப்பினும், அந்தப் பெண் ஸ்கூட்டரில் தப்பியோட முயன்றபோது, மனைவி அவரைத் துரத்திச் சென்று சாலையின் நடுவில் தடுத்து நிறுத்தி செருப்பால் அடிக்கத் தொடங்கியுள்ளார். இதனால் இரு பெண்களுக்கும் இடையே கடுமையான தெருச்சண்டை வெடித்தது; ஒருவரையொருவர் முடி பிடித்து இழுத்துக் கொண்டும், ஆடைகளைக் கிழித்துக் கொண்டும் தாக்கியதோடு, காதலி எனக்கூறப்படும் பெண் செங்கல்லை எடுத்து மனைவியைத் தாக்க முயன்றபோது கணவனும் அங்கிருந்த பொதுமக்களும் தடுத்து நிறுத்தியுள்ளனர்.
இறுதியாக உள்ளூர்வாசிகள் இருவரையும் சமாதானப்படுத்தி பிரித்து வைத்ததைத் தொடர்ந்து, காதலி அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். அவ்வழியே சென்றவர்களால் கைப்பேசியில் படம்பிடிக்கப்பட்ட இந்த மோதல் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வரும் நிலையில், தாஜ்கஞ்ச் காவல் துறையினர் இதுகுறித்து விசாரித்து வருகின்றனர்; இருப்பினும் இரு தரப்பிலிருந்தும் இதுவரை எந்தவொரு முறையான புகாரும் அளிக்கப்படவில்லை எனப் போலீஸார் தெரிவித்துள்ளனர்.
சென்னை மெரினா காவல் நிலையத்தில் தலைமை போக்குவரத்து போலீசாக பணியாற்றி வரும் ரேவதி (40), மயிலாப்பூர் காவல் குடியிருப்பில் வசித்து…
பீகாரின் கயா மாவட்டம் மஸ்துபுரா கிராமத்தைச் சேர்ந்த விகாஷ் குமார் என்ற ஏழை பிளம்பர் தொழிலாளியின் வங்கிக் கணக்கில், திடீரென…
தமிழகத்தில் சொத்து வாங்குபவர்கள் தாலுகா அலுவலகங்களுக்கு அலைவதைத் தவிர்க்க, இ-சேவை மையங்கள் மூலம் ஆன்லைனில் பட்டா மாற்றம் செய்ய விண்ணப்பிக்கும்…
கல்வி கட்டண விவரங்களை வெளியிடாத தனியார் பள்ளிகள் குறித்து ஜூன் 10-ம் தேதிக்குள் அறிக்கை அனுப்ப வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை…
திமுக மற்றும் உதயநிதியின் தனிப்பட்ட வியூக வகுப்பாளராகச் செயல்பட்டு வந்த சுனில் தனது பொறுப்பில் இருந்து திடீரென விலகியிருப்பது திமுக…
அயதுல்லா மொஜ்தபா கமேனி மார்ச் மாதம் ஈரானின் உச்ச தலைவராக நியமிக்கப்பட்டார். அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், தனது நாட்டின்…