உத்தரப் பிரதேச மாநிலம் பரேலி மாவட்டத்தில் உள்ள இசாத்நகர் காவல் எல்லைக்குட்பட்ட லே பஹாட்கஞ்ச் கிராமத்தில், சன்னி என்ற ராகுல் என்ற இளைஞர் தனது மனைவியான காஜல் என்பவருடன் ஏற்பட்ட தகராறு காரணமாகத் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளார். தம்பதியிடையே ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக மனைவி காஜல் கோபித்துக் கொண்டு தனது தாய் வீட்டிற்குச் சென்றுள்ளார்.
இந்நிலையில், இருவருக்கும் இடையே தொலைபேசியில் மீண்டும் வாக்குவாதம் மற்றும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் கடும் ஆத்திரமடைந்த சன்னி, ஃபேஸ்புக் லைவ் மூலம் வீடியோவை பதிவு செய்தபடியே தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். இச்சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த இசாத்நகர் போலீசார், சன்னியின் சடலத்தைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்து மேல் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
