“அவள் அதற்கு அடிமையாவிட்டாள்” மனைவியை துண்டுதுண்டாக வெட்டி ஓடையில் வீசிய கணவர்… போலீஸீல் திடுக்கிடும் வாக்குமூலம்.!!

By Soundarya on புரட்டாதி 5, 2025

Spread the love

மகாராஷ்டிரா மாநிலம் பிவாண்டியை சேர்ந்தவர் முஸ்கான் (22). இவருக்கு தாஹா என்பவருடன் திருமணமாகி உள்ளது. இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் 30 ஆம் தேதியன்று மனைவி முஸ்கானை கணவர் தாஹா தலையை துண்டித்து கொலை செய்து வீசியுள்ளார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தியதில், தாஹா போலீசிடம் திடுக்கிடும் தகவலை அளித்துள்ளார். அதாவது தனது மனைவி போதைப்பொருளுக்கு அடிமையானதால் கண்டித்தும் கேட்கவில்லை.

அதனால் அவளின் கழுத்தை அறுத்து கொன்று, உடலை துண்டு துண்டாக வெட்டி ஓடையில் வீசியதாக  கூறினார். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசாருக்கு உடலின் சில பாகங்கள் மட்டுமே கிடைத்துள்ளது. மேலும் மோப்ப நாயுடன் மீதமுள்ள உடலை தேடி வருகின்றனர். தாஹா கைது செய்யப்பட்டு செப்., 11 வரை நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது.