கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த 35 பெண் ஒருவர் தனது கணவருடன் வசித்து வருகிறார். இந்த நிலையில் தன்னுடைய கணவர் பணத்தாசையை தூண்டிவிட்டு மனைவியை வலுக்கட்டாயமாக உல்லாசமாக இருக்க வேண்டும் என்று தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதனால் தன்னுடைய விருப்பத்திற்கு மாறாக அந்தப் பெண் கணவர் கூறியபடி வேறு ஒரு நபரோடு உல்லாசமாக இருந்துள்ளார். இதனை மறைந்திருந்து கணவர் வீடியோ எடுத்துள்ளார். அந்த வீடியோவை காட்டி மனைவியை மிரட்டி வந்துள்ளார். மேலும் தகாத வார்த்தையால் திட்டி மனைவியை தாக்கியும் உள்ளார். இந்த நிலையில் கணவரின் தொல்லை தாங்க முடியாமல் மனைவி அவருக்கு தெரிந்த காவல் நிலையத்தில் பணியாற்றும் போலீஸ்காரரான சந்திர நாயக் என்பவரிடம் கூறியுள்ளார். இதனை அடுத்து அவர் பெண்ணின் வீட்டுக்கு வந்து கணவர் செல்போனில் இருந்து ஆபாச வீடியோக்களை அழித்துள்ளார். அதன் பிறகு சந்திர நாயக் அந்த பெண்ணின் கணவரின் அனுமதியோடு பெண்ணோடு உல்லாசமாக இருந்து வந்துள்ளார். மேலும் சிலரோடு உறவில் இருக்க வேண்டும் என்று சந்திர நாயக் பெண்ணை கட்டாயப்படுத்திய நிலையில் இது குறித்து காவல் நிலையத்தில் அந்த பெண் புகார் அளித்துள்ளார். இந்த புகார் அடிப்படையில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார்கள்.
விசாரணையில் கட்டிட தொழிலாளியான அந்த பெண்ணின் கணவர் சரியாக வேலைக்கு எதுவும் செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்துள்ளார். ஆனால் அவருக்கு பண தேவை என்பதால் மனைவியை வைத்து பணம் சம்பாதிக்க முடிவு செய்துள்ளார். அதன்படி ஆண் நண்பர்களுக்கும் மனைவியை விருந்தாக்கி பணம் சம்பாதித்து வந்துள்ளார். ஆனால் மனைவிக்கு விருப்பமில்லை. என்ற சம்பவம் குறித்து தனக்கு தெரிந்த போலீஸ்காரர்களிடம் அந்த பெண் கூறியபோதுதான் அதனை சாதகமாக பயன்படுத்திக் கொண்ட போலீஸ்காரரும் பெண் மூலம் பணம் சம்பாதித்து வந்தார் என்பது தெரிய வந்துள்ளது. இதனை அடுத்து காவல்துறையினர் போலீசார் சந்திரநாயக் மற்றும் பெண்ணின் கணவரை கைது செய்தனர்.
