“4 ஆண்டு ரகசிய உறவு, ஒரு நொடியில் கழன்ற மணிக்கட்டு”… நெல்லையை அதிரவைத்த கள்ளக்காதல் கொலை பின்னணி…!!!

Spread the love

திருநெல்வேலி அருகே கள்ளக்காதல் விவகாரத்தில் வாலிபர் ஒருவர் கொடூரமாக வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சி அருகே உள்ள தெற்கு பாப்பான்குளம் பகுதியைச் சேர்ந்த வேல் (31) என்பவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த சுதாகர் என்பவரின் மனைவி மணிமேகலைக்கும் இடையே கடந்த நான்கு ஆண்டுகளாக கள்ளத்தொடர்பு இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.

மேலும் இவர்கள் இருவரும் சில ஆண்டுகளுக்கு முன்பு ஊரை விட்டு வெளியேறி மும்பையில் ஒன்றாக வசித்து வந்த நிலையில், சமீபத்தில் ஊர் திரும்பிய வேல் மீது ஆத்திரத்தில் இருந்த சுதாகர் மற்றும் அவரது உறவினர்கள் அவரைத் தீர்த்துக்கட்டத் திட்டம் தீட்டியுள்ளனர். சம்பவத்தன்று இரவு வேல் தனது சகோதரி வீட்டிற்குச் சென்றுவிட்டு மோட்டார் சைக்கிளில் திரும்பிக்கொண்டிருந்தபோது, நாலுமுக்கு சந்திப்பு பகுதியில் மறைந்திருந்த சுதாகர், அவரது சகோதரர் சுடலைமுத்து மற்றும் நண்பர் இசக்கிமுத்து ஆகியோர் அவரை வழிமறித்தனர்.

இந்நிலையில் கண் இமைக்கும் நேரத்தில் அவர்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளால் வேலைச் சரமாரியாக வெட்டியதில், அவரது இடது கை மணிக்கட்டு துண்டானதுடன் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே அவர் துடிதுடித்து உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த கல்லிடைக்குறிச்சி காவல்துறையினர், கொலையில் தொடர்புடைய மூன்று பேரையும் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Rajeshwari

Recent Posts

காக்கிச் சட்டையில் கறை..! 30 லட்சம் கடனுக்காக ரியல் எஸ்டேட் அதிபர் கொலை.. தெலங்கானாவை உலுக்கிய போலீஸ் தம்பதியின் கைவரிசை…!

தெலங்கானா மாநிலம் சின்னக்கோடூர் பகுதியைச் சேர்ந்த காவலர் பிரவீன் குமார் மற்றும் அவரது மனைவி ரஜிதா ஆகிய இருவரும் கடந்த…

2 மணத்தியாலங்கள் ago

“தோசை சுட்டுத் தர மறுத்துவிட்டேன்..!” தந்தை வினு சக்கரவர்த்தியின் கடைசி ஆசை குறித்து மகள் உருக்கம்…!

தமிழ் சினிமாவில் வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களில் முத்திரை பதித்த நடிகர் வினு சக்கரவர்த்தியின் மகள், தனது தந்தையின் கடைசி…

3 மணத்தியாலங்கள் ago

தளபதி பக்கம் சாய்ந்த திருமாவளவன்..! ஸ்டாலினுக்குப் புதிய தலைவலி தவெக ஆட்சி அமையுமா..?

தமிழக அரசியலில் 2026 சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்கியுள்ளன. 108 இடங்களை வென்று தனிப்பெரும் கட்சியாக…

3 மணத்தியாலங்கள் ago

கூவத்தூர் 2.0: புதுச்சேரி சொகுசு பங்களாவில் 30 எம்.எல்.ஏ-க்கள்..! விஜய்க்கு செக் வைத்த எடப்பாடி பழனிசாமி…!

தமிழக அரசியலில் மீண்டும் ஒரு 'ரிசார்ட் அரசியல்' அரங்கேறியுள்ளது, அதிமுகவின் சுமார் 30-க்கும் மேற்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் புதுச்சேரியில் உள்ள…

3 மணத்தியாலங்கள் ago

மெஜாரிட்டி டிராமா.. பின்னணியில் அமித் ஷா..? ஆளுநருக்கு எதிராக தமிழகத்தில் வெடிக்கும் புதிய புரட்சி…!

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, தவெக தலைவர் விஜய் ஆட்சி அமைக்க உரிமை கோரியுள்ள நிலையில், அதற்கு முட்டுக்கட்டை…

3 மணத்தியாலங்கள் ago

“அங்குட்டு ஆளுநர்.. இங்குட்டு ஸ்டாலின்..! சிக்கலில் விஜய்.. 5 எம்.எல்.ஏ-க்களுக்காக நடக்கும் பலப்பரீட்சை…!”

தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள தவெக தலைவர் விஜய்யின் ஆட்சி அமைக்கும் முயற்சிக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எடுத்துள்ள அதிரடி…

3 மணத்தியாலங்கள் ago