கிரேட்டர் நொய்டா மேற்கு பகுதியில் உள்ள சென்சுரியன் பார்க் டிராபிகல் கார்டன் சொசைட்டியின் 21-வது மாடியில் இருந்து தவறி விழுந்து 31 வயது நபர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திங்கட்கிழமை மாலை நடந்த இச்சம்பவம் குறித்து அப்பகுதி மக்களிடையே பெரும் சோகம் நிலவுகிறது.
உயிரிழந்த நபர் ஹர்ஷித் லவானியா என அடையாளம் காணப்பட்டுள்ளார். திங்கட்கிழமை மாலையில் அவரது வாடகை பிளாட்டிற்கு பிரிந்து வாழும் மனைவி வந்ததை அடுத்து, தனது பால்கனியில் இருந்து கீழ் தளத்திற்குச் செல்ல முயன்றபோது அவர் எதிர்பாராதவிதமாக வழுக்கி கீழே விழுந்திருக்கலாம் என்று போலிசார் சந்தேகிக்கின்றனர்.
தகவலறிந்து உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், ஹர்ஷித் லவானியாவின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்துக்கான உண்மையான காரணம் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
