“திருமணமான 20 நாட்களில்…” வேறொருவருடன்மனைவி…! “நடுரோட்டில் பளார் விட்டு..” கணவர் இறந்த செய்தி கேட்டு இளம்பெண் எடுத்த விபரீத முடிவு…!!

By Devi Ramu on ஆடி 28, 2026

Spread the love

உத்தரப்பிரதேச மாநிலம் இட்டாவா பகுதியில், திருமணமாகி 20 நாட்களே ஆன நிலையில் அங்கித் குஷ்வாஹா என்ற வாலிபர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அங்கித் தனது மனைவியை வேறொரு நபருடன் சந்தையில் ஒன்றாகப் பார்த்ததாகவும், இதனால் இருவருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பான வீடியோ சோஷியல் மீடியாவில் வைரல் ஆனது. இதனால் மிகுந்த மனவேதனையும் ஏமாற்றமும் அடைந்த அங்கித், தனது வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

தனது கணவர் உயிரிழந்த செய்தி கேட்டு அதிர்ச்சியடைந்த மனைவி, அதிக அளவிலான தூக்க மாத்திரைகளை உட்கொண்டு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். புதிதாகத் தொடங்கிய குடும்பத்தில் நிகழ்ந்த இந்தத் திடீர் அசம்பாவிதம் இரு வீட்டாரையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ள காவல் துறையினர், இத்துயரச் சம்பவத்தின் பின்னணியில் உள்ள உண்மைத் தன்மையைக் கண்டறியத் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.