“என் காதலை மதிக்கல” எனக்கு மரணத்தை தந்துவிட்டு… நீ சந்தோஷமா இரு… மனைவியின் டார்ச்சரால் கதறிய கணவர் தற்கொலை… அதிர வைக்கும் வீடியோ…!!

By Soundarya on பங்குனி 26, 2026

Spread the love

உத்தரப் பிரதேச மாநிலம் மெயின்புரியில், மனைவியின் கொடுமையால் மனமுடைந்த கணவர் ஒருவர் உருக்கமான தற்கொலை வீடியோவை வெளியிட்டுவிட்டு உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மெயின்புரியைச் சேர்ந்த அனில் என்பவர், தனது தற்கொலைக்கு மனைவியும் அவரது குடும்பத்தினருமே காரணம் என்று குற்றம் சாட்டி வீடியோ ஒன்றைப் பதிவு செய்துள்ளார். ஹோலி பண்டிகை முதலே அனிலின் மனைவி தனது குழந்தைகளுடன் கோபித்துக்கொண்டு தாய் வீட்டிற்குச் சென்று தங்கியுள்ளார். மனைவியைப் பிரிந்த துயரத்திலும், அவர் கொடுத்ததாகக் கூறப்படும் மன உளைச்சலாலும் அனில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.

அந்த வீடியோவில் அனில் பேசிய வார்த்தைகள் அனைவரையும் கண் கலங்கச் செய்துள்ளன. “என் வாழ்க்கையை அழித்தவளே.. நான் உன் மீது அளவற்ற அன்பு வைத்திருந்தேன், ஆனால் நீ என் காதலை மதிக்கவில்லை. உன்னிடம் நான் கேட்டது எல்லாம் இரண்டு நிமிடம் நிம்மதியான வாழ்க்கைதான், ஆனால் நீ எனக்கு மரணத்தைத் தந்துவிட்டாய். நீ சந்தோஷமாக இரு…” என்று தனது வேதனையைப் பகிர்ந்துள்ளார்.

   

தகவலறிந்து வந்த போலீசார் அனிலின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அந்த வீடியோ மற்றும் கடிதத்தின் அடிப்படையில், அனிலின் மனைவி மற்றும் அவரது வீட்டார் மீது வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ஒருதலைப்பட்சமான அன்பு மற்றும் குடும்பத் தகராறு ஒரு மனிதனின் உயிரை எப்படிப் பறிக்கிறது என்பதற்கு இந்தச் சம்பவம் ஒரு சான்றாக மாறியுள்ளது.