தமிழ்நாட்டை பூர்வீகமாகக் கொண்ட ஸ்ரீவித்யா திருவருட்செல்வர் படத்தின் மூலமாக குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். இதனை தொடர்ந்து மலையாள மற்றும் தெலுங்கில் கவனம் செலுத்தி வந்த அவர் கே பாலசந்தர் இயக்கிய 100க்கு 100 திரைப்படம் திரைப்படத்தின் மூலம் மேஜர் ரோல் செய்ய ஆரம்பித்தார். அதில் அவருடைய நடிப்பு மிக சிறப்பாக இருந்தது காரணமாக அடுத்தடுத்து வாய்ப்புகள் அவருக்கு கிடைக்க தொடங்கின. அதன் பிறகு அன்னை வேளாங்கண்ணி, டெல்லி டு மெட்ராஸ் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்தார்.

கமல்ஹாசன் உடன் இணைந்து அபூர்வ ராகங்கள் படத்தில் நடித்த போது இரண்டு பேருமே திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று இரு குடும்பத்தாரும் விரும்பினார்கள். அதுமட்டுமல்லாமல் கமலும் ஸ்ரீவித்யாவும் காதலித்தனர். ஆனால் அதன் பிறகு சில காரணங்களால் இருவரும் பிரிந்து விட்ட நிலையில் கமல் வாணி கணபதியை திருமணம் செய்து கொண்டார். இதனால் மிகுந்த மன வருத்தத்தில் இருந்த ஸ்ரீவித்யாவீட்டிலேயே முடங்கி கிடந்தார். ஒரு கட்டத்தில் ஸ்ரீவித்யா ஹீரோயின் வாய்ப்புகளை இழந்து அம்மா கேரக்டரில் நடிக்க ஆரம்பித்தார். அதுமட்டுமல்லாமல் அதிகம் குணசத்திர வேதங்களிலும் நடித்தார்.

இந்த சமயத்தில் ஸ்ரீவித்யாவுக்கு ஆறுதலாக ஜார்ஜ் என்பவர் வாழ்க்கையில் நுழைந்தார். மன அழுத்தத்தில் இருந்த அவருக்கு காதல் என்ற வார்த்தையை கூறி அவரை மயக்கி அனைவருடைய எதிர்ப்பையும் மீறி ஸ்ரீவித்யா அவரை திருமணம் செய்து கொண்டார். முதலில் அவரைப் பற்றி சரியாக ஸ்ரீவித்யாவுக்கு தெரியவில்லை. அதன் பிறகு அவருடைய குணம் பற்றி ஸ்ரீவித்யாவுக்கு தெரிய வர ஒரு கட்டத்தில் என்னுடைய வீட்டை எனக்கு கொடுத்து விடு என்று அவரிடம் ஸ்ரீவித்யா கேட்டார். ஆனால் அதையெல்லாம் தர முடியாது என்று வீட்டை விட்டு ஸ்ரீவித்யாவை ஜார்ஜ் வெளியே தள்ளியுள்ளார். இதனால் மிகுந்த மன வருத்தத்தில் இருந்த ஸ்ரீவித்யா அவரிடம் இருந்து விவாகரத்து பெற்றுக் கொண்டு சினிமாவில் கவனம் செலுத்த தொடங்கினார்.

இந்த நிலையில் ஸ்ரீவித்யா திருமண வாழ்க்கை பற்றி பேசியுள்ள நடிகை ஷர்மிளா, நாம துரத்தி போற ஒருத்தர விட நம்பள துரத்தி வர ஒருத்தர கல்யாணம் பண்ணிக்கிட்டா லைப் நல்லா இருக்குன்னு ஸ்ரீ வித்யா அன்னைக்கு நினைச்சாங்க. அவரும் ஏதேதோ பேசி அவங்கள ஏமாத்தி கல்யாணம் பண்ணிக்கிட்டாரு. ஆசை அறுவது நாள் மோகம் 30 நாள் என்ற பழமொழிக்கு ஏற்ப ஸ்ரீ வித்யா இளமையில் ரொம்ப அழகா இருந்ததால் அவங்க கூட கொஞ்ச நாள் வாழ்க்கை நடத்திட்டு அப்புறம் அவர்களை துரத்தி விட்டுட்டாங்க. அவங்களோட சொத்து பணம் என எல்லாத்தையும் எடுத்துக்கிட்டு நடுத்தெருவுலதான் அவங்கள நிப்பாட்டுனாங்க என நடிகை சர்மிளா பேசியுள்ளார்.
