மகாராஷ்டிரா மாநிலம் புனே மாவட்டம் போரூர் தாலுகாவில் உள்ள சரோலா கிராமத்தில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தும் படுகொலைச் சம்பவம் ஒன்று நடந்துள்ளது. அப்பகுதியைச் சேர்ந்த தீபக் பால் என்பவரின் மனைவிக்கும், அமர் பவார் (25) என்பவருக்கும் இடையே கடந்த 4 ஆண்டுகளாகத் தகாத உறவு இருந்து வந்துள்ளது. இதனால் இரு குடும்பத்தாருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில், கொலை நடப்பதற்கு 3 நாட்களுக்கு முன்பு அமர் பவார், தீபக் பாலின் மனைவியை அவரது சொந்த மாநிலமான உத்தர பிரதேசத்திற்கு அனுப்பத் திட்டமிட்டு சரோலா கிராமத்திற்கு அழைத்து வந்துள்ளார்.
இதனையறிந்த தீபக் பால், வியாழக்கிழமை இரவு 9 மணியளவில் அமர் பவாரிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். வாக்குவாதம் முற்றிய நிலையில், தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து அமர் பவாரின் கழுத்துப் பகுதியில் சரமாரியாகக் குத்தியுள்ளார். இதில் படுகாயமடைந்து அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டதால் அமர் பவார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்தக் கொடூரத் தாக்குதல் சம்பவம் அருகில் இருந்த சிசிடிவி கேமராவில் அப்படியே பதிவாகியுள்ளது. இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த ராஜ்காட் போலீசார், கொலையாளி தீபக் பாலை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கர்நாடக மாநிலம் பெங்களூரு கே.ஆர்.புரம் பட்டரஹள்ளி சிக்னல் அருகே உள்ள 'யுனிலைட்' எலக்ட்ரானிக்ஸ் ஷோரூமில், செவ்வாய்க்கிழமை மாலை மது மற்றும்…
கர்நாடக மாநிலம் உடுப்பியைச் சேர்ந்த ஆல்வின் பிரகாஷ் குந்தர் என்பவர் கடந்த 14 ஆண்டுகளாக ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள…
டெல்லி சதர் பஜார் பகுதியைச் சேர்ந்த 6-ஆம் வகுப்பு படிக்கும் 11 வயது சிறுமி, கடந்த செப்டம்பர் 16 அன்று…
தலைநகர் டெல்லியில் உள்ள புகழ்பெற்ற கல்காஜி மந்திர் மற்றும் இஸ்கான் கோயிலை இணைக்கும் பூங்கா பகுதியில், திங்கள்கிழமை மாலை 17…
உத்தரப் பிரதேச மாநிலம் ஷாஜஹான்பூர் மாவட்டம் நத்தாப்பூர் கிராமத்தைச் சேர்ந்த வீர்பால் என்பவரின் தந்தை உயிரிழந்ததை அடுத்து, அவரது குடும்பத்தினரும்…
தெலுங்கானா மாநிலம் ஜக்தித்யால் மாவட்டம் மாதப்பூர் கிராமத்தைச் சேர்ந்த பிரபல யூடியூபறான வைஷ்ணவி (20) என்பவரை, அவரது காதல் கணவரான…