திண்டுக்கல் மாவட்டத்தைப் பூர்வீகமாகக் கொண்ட பழனிசாமி – தனலட்சுமி தம்பதியினர், திருப்பூர் பல்லடம் பகுதியில் பல ஆண்டுகளாக குடும்பத்துடன் வசித்து வந்தனர். இவர்களது மகள் பூவரசி, சமூக வலைதளமான இன்ஸ்டாகிராம் மூலமாக திண்டுக்கல்லைச் சேர்ந்த அக்ஷய் என்ற இளைஞருடன் பழகி வந்துள்ளார். இந்த நட்பு நாளடைவில் காதலாக மாறிய நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெற்றோர்களுக்குத் தெரியாமல் இருவரும் ரகசியமாகத் திருமணம் செய்துகொண்டுள்ளனர். எனினும், திருமணத்திற்குப் பிறகும் அவர்கள் ஒரே வீட்டில் சேர்ந்து வாழாமல் தனித்தனியாகவே வசித்து வந்துள்ளனர்.
இந்நிலையில், தங்களின் திருமண விவகாரம் குறித்து சமரசம் செய்துகொள்ளலாம் என்று கூறி அக்ஷய் பட்டப்பகலில் பூவரசியின் வீட்டிற்கு வந்துள்ளார். பேச்சுவார்த்தை நடத்தும் சாக்கில் வீட்டிற்குள் நுழைந்த அவர், திடீரெனத் தனது மனைவியான பூவரசியையும், மாமியார் தனலட்சுமியையும் கொடூரமாக வெட்டிக் கொலை செய்துள்ளார். திருப்பூர் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ள இந்த கொடூர இரட்டைக் கொலைச் சம்பவம் குறித்து காவல்துறையினர் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
சன் தொலைக்காட்சியின் 'கல்யாண பரிசு' தொடர் மூலம் பிரபலமடைந்த சின்னத்திரை நடிகர் ஈஸ்வர், தனது முன்னாள் மனைவி ஜெயஸ்ரீயை விவாகரத்து…
நடிகர் சுகுமார் தனது முகநூல் பக்கத்தில், 2002-ஆம் ஆண்டு ஜூனியர் என்.டி.ஆரின் தொடக்க காலத் தெலுங்குப் படப்பிடிப்பில் நடந்த ஒரு…
சென்னையில் நடைபெற்ற ஆந்திர முன்னாள் முதல்வர் ஒய்.எஸ். ஜெகன் மோகன் ரெட்டியின் உறவினர் இல்லத் திருமண வரவேற்பு விழாவில் நடிகர்…
தமிழக வெற்றிக் கழகத்தின் முன்னாள் நிர்வாகி நாகை பூபாலன் கைதான விவகாரத்தில், சர்வதேச அளவில் இயங்கும் மாபெரும் போதைப்பொருள் கடத்தல்…
உத்தரபிரதேச மாநிலம் கன்னோஜ் மாவட்டத்திற்குட்பட்ட ஜகத்பூர் பகுதியைச் சேர்ந்த சுக்பீர் சிங் என்பவர் அரியானாவில் பணியாற்றி வந்தார். 11 ஆண்டுகளுக்கு…
தமிழகத்தைச் சேர்ந்த தொழிலதிபர் ஆனந்த், பெங்களூரு எலகங்கா பகுதியில் தனது குடும்பத்துடன் வசித்துக்கொண்டு மக்காச்சோள இயந்திரங்கள் தயாரிக்கும் தொழில் செய்து…