மருத்துவமனையில் இருக்கை கிடைக்காமல் தவித்த தனது கர்ப்பிணி மனைவிக்காக, ஒரு கணவர் தன்னைத்தானே “மனித நாற்காலியாக” மாற்றிக்கொண்ட நெகிழ்ச்சியான சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது. மருத்துவமனைக்குச் சிகிச்சைக்கு வந்த அந்தப் பெண், நீண்ட நேரம் நிற்க முடியாமல் கால் வலியால் துடித்தபோது, அங்கிருந்த மற்றவர்கள் யாரும் அவருக்கு இருக்கை தந்து உதவ முன்வரவில்லை. அங்கிருந்தவர்கள் அனைவரும் தங்களது கைபேசிகளில் (Phone) மூழ்கி இருந்தார்களே தவிர, ஒரு கர்ப்பிணிப் பெண் சிரமப்படுவதைக் கவனித்து மனிதாபிமானத்துடன் செயல்படத் தவறிவிட்டனர்.
தன் மனைவியின் வலியைக் கண்டு பொறுக்க முடியாத அந்த நபர், உடனடியாகத் தரையில் அமர்ந்து தனது முதுகைச் சாய்மானமாகவும், மடியை இருக்கையாகவும் மாற்றினார். அவரது மனைவியும் அந்த அன்பான “மனித நாற்காலியில்” அமர்ந்து சற்று ஓய்வெடுத்தார். சமூக வலைதளங்களில் பகிரப்பட்ட இந்த வீடியோ, ஒரு கணவரின் அளவற்ற அன்பைப் பாராட்டுவதோடு மட்டுமல்லாமல், பொது இடங்களில் மற்றவர்களின் சிரமத்தை உணராமல் கைபேசியே கதி என்று இருக்கும் இன்றைய மனிதர்களின் சுயநலத்தையும் கடுமையாக விமர்சித்துள்ளது.
இறந்தவர்களின் அஸ்தியை புனித நதிகள், ஆறுகள் அல்லது கடல்களில் கரைத்து, அவர்களின் ஆன்மா நற்கதி அடைய வேண்டும் என்று பிரார்த்திப்பது…
தமிழகத்தில் மக்கள் சேவை மற்றும் சமூகப் பங்களிப்பை நோக்கமாகக் கொண்டு, நடிகர் ரஜினிகாந்தின் மனைவி லதா ரஜினிகாந்த் "மக்கள் மேடை"…
பாகிஸ்தானின் கொந்தளிப்பான மாகாணமான பலுசிஸ்தானின் சஹ்ரி பகுதியில், பிஎன்பி (BNP) கட்சியின் முக்கியத் தலைவரும் முன்னாள் மேயருமான சர்தார் நசீர்…
தமிழக அரசியலில் பரபரப்பான திருப்பமாக, அ.தி.மு.க.விலிருந்து விலகி நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தில் (த.வெ.க.) முன்னாள் அமைச்சர்கள்,…
வாஷிங்டன் மாநிலத்தின் நியூபோர்ட் பள்ளி மாவட்டத்தைச் சேர்ந்த மாற்று உயர்நிலைப் பள்ளியான பெண்ட் ஓரில் ரிவர் பள்ளியில் ஆசிரியராகவும் இயக்குநராகவும்…
கேரளா மாநிலம், திருவனந்தபுரம் மாவட்டம் வட்டியூரகாவு பகுதியைச் சேர்ந்த 46 வயதுடைய சுரேஷ் என்பவருக்கும், மன்னாந்தலை பகுதியைச் சேர்ந்த 36…