மேற்கு வங்க மாநிலம் தெற்கு தினாஜ்பூர் மாவட்டத்தில் உள்ள கங்காரம்பூர் பகுதியில், ரிந்து கோஷ் (46) என்ற நபர் தனது மனைவி சீமா சர்க்காரை கொடூரமான முறையில் தலை துண்டித்துக் கொலை செய்துள்ளார். தம்பதியருக்கு இடையே ஏற்பட்ட குடும்பத் தகராறு காரணமாக இந்தத் துயரச் சம்பவம் நிகழ்ந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
கொலைக்குப் பிறகு, ரிந்து கோஷ் தனது மனைவியின் துண்டிக்கப்பட்ட தலையை எடுத்துக் கொண்டு அருகில் உள்ள காளி கோவிலுக்குச் சென்று, அதைத் தன் மடியில் வைத்தபடி அமர்ந்திருந்தார். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் உடனடியாகக் காவல்துறையினருக்குத் தகவல் கொடுத்தனர். காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து அவரைக் கைது செய்து, கொலைக்கு பயன்படுத்திய ஆயுதத்தையும் பறிமுதல் செய்தனர்.
கொல்லப்பட்ட சீமாவின் உடல் அவர்களின் வீட்டில் கண்டெடுக்கப்பட்டது. சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமான இந்தத் தம்பதியருக்கு இரண்டு சிறுவர்கள் உள்ளனர். இந்தச் பயங்கரச் சம்பவம் நடந்த சமயத்தில் அந்த சிறுவர்களும் வீட்டிலேயே இருந்ததாகக் கூறப்படுகிறது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது
