“7 ஆண்டுகள் குடும்ப வாழ்க்கை… 3 குழந்தைகள்…” மனைவி, மாமியாருக்கு சரமாரியாக கத்திக்குத்து… கணவரின் வெறிச்செயல்… பகீர் சம்பவம்…!!

By Devi Ramu on புரட்டாதி 3, 2026

Spread the love

தெலுங்கானா மாநிலம் ராஜன்னா சிரிசில்லா மாவட்டம் எல்லாரெட்டிபேட்டை மண்டலத்திற்கு உட்பட்ட படி்ரா கிராமத்தில் நடுக்கத்தை ஏற்படுத்தும் கொடூரக் கொலைச் சம்பவம் ஒன்று நடந்துள்ளது. இக்கிராமத்தைச் சேர்ந்த ஜோதி என்பவருக்கும் சுரேஷ் என்பவருக்கும் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி 3 குழந்தைகள் உள்ளனர்.

கடந்த சில மாதங்களாகக் குடும்பத் தகராறு காரணமாகக் கணவரைப் பிரிந்த ஜோதி, கடந்த 7 மாதங்களாகத் தாய் எல்லவ்வா வீட்டில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில், சம்பவத்தன்று காரில் வந்த கணவன் சுரேஷ், மனைவி ஜோதி மற்றும் மாமியார் எல்லவ்வா ஆகிய இருவரையும் கத்தியால் சரமாரியாகக் குத்தியுள்ளார்.

   

இந்தக் கொடூரத் தாக்குதலில் மனைவி ஜோதி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயமடைந்த மாமியார் எல்லவ்வாவை மீட்டுச் சிரிசில்லா அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்காகச் சேர்த்துள்ளனர். மனைவியைக் கொடூரமாகக் கொன்ற சுரேஷ், நேராகச் சிரிசில்லா காவல் நிலையத்திற்குச் சென்று போலீசார் முன் சரணடைந்தார். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.