“ஒரே ஒரு பூஜை எல்லாமே முடிஞ்சிடும்”… மனைவிக்கு மது கொடுத்து, பீடி சாம்பலை விழுங்க வைத்து, சூடு போட்டு மாந்திரீக பூஜை… கணவன் செய்த கொடூர செயல்…!

Spread the love

கேரள மாநிலம் கோட்டையம் மாவட்டம் திருவச்சியூர் பகுதியை சேர்ந்த தாஸ் (55) என்பவரின் மகன் அகில் (26). இவர் தனது காதலியுடன் திருமணம் செய்து கொண்டு பெற்றோர் வீட்டில் வசித்து வந்த நிலையில் மனைவிக்கு சமீபத்தில் உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனை தீய சக்திகளின் தாக்கமாக நம்பிய அகிலின் குடும்பத்தினர், பட்டினத்திட்டா பெரும் துருத்தி மடச்சிரா பகுதியை சேர்ந்த மந்திரவாதி சிவதாஸ் (54) என்பவரிடம் சென்றுள்ளார். அவர் சில மாந்திரீக பூஜைகள் செய்தால் மனைவி நலம் பெறுவார் என்று கூறியதால் குடும்பத்தினர் அதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளனர். பிறகு மந்திரவாதி வீட்டுக்கு வந்து சுமார் 10 மணி நேரம் பூஜை செய்தபோது இளம் பெண்ணை ஒரு இடத்தில் அமர வைத்து வலுக்கட்டாயமாக மது குடிக்க வைத்ததுடன் பீடி சாம்பலை விழுங்க செய்துள்ளனர்.

மேலும் உடலின் பல பகுதிகளில் தீயால் சூடு வைத்து கொடுமைப்படுத்தியுள்ளனர். இதனைத் தொடர்ந்து பெண்ணின் தந்தை மகளைப் பார்க்க வீட்டுக்கு வந்த போது மகள் தன்னிடம் நடந்த கொடுமையை தெரிவிக்க உடனே போலீசில் அவர் புகார் அளித்தார். இந்த புகாரைத் தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி அகில் மற்றும் அவருடைய தந்தை தாஸ், மந்திரவாதி ஆகிய மூன்று பேரையும் கைது செய்தனர். இந்த சம்பவம் தொடர்பாக தற்போது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ள நிலையில் அந்த பெண்ணுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Nanthini

Recent Posts

“விஜய் அண்ணா கண்டிப்பா நல்லது செய்வார்” ஆனால் இது இருக்கும்.. நடிகர் ரஜினி மகள் சௌந்தர்யா சொன்ன விஷயம்..!!

தமிழகத்தின் புதிய முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள விஜய்க்கு, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் இரண்டாவது மகளும் திரைப்படத் தயாரிப்பாளருமான சௌந்தர்யா ரஜினிகாந்த் தனது…

4 மணத்தியாலங்கள் ago

“என் இன்னிங்ஸ பார்க்காதீங்க”… பஞ்சாப் மேட்ச் வெற்றிக்குப் பின் ரோஹித் சர்மா சொன்ன ‘அந்த’ ஒற்றை வார்த்தை… இணையத்தில் வைரலாகும் வீடியோ…!!!

தர்மசாலாவில் நடைபெற்ற ஐபிஎல் 2026 கிரிக்கெட் தொடரில், பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி 201…

4 மணத்தியாலங்கள் ago

“ஒன்னு ஆரம்பத்துலயே சொல்லிடுங்க இல்லனா வாய மூடுங்க…” அணி நிர்வாகத்தை வெளுத்து வாங்கிய விராட் கோலி… வைரலாகும் அந்த 2 நிமிட வீடியோ…!!

முன்னாள் இந்திய கிரிக்கெட் கேப்டன் விராட் கோலி, ஆர்சிபி (RCB) பாட்காஸ்ட் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மயந்தி லாங்கரிடம் பேசுகையில், இந்திய…

4 மணத்தியாலங்கள் ago

அதிர்ச்சித் திருப்பம்..! “ராணுவ தீர்வு கிடையாது… ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு பாதுகாப்பு.. டெல்லியில் ஈரான் அமைச்சர் அப்பாஸ் அராக்சி பரபரப்பு பேச்சு..!!

இந்தியாவில் நடைபெறும் பிரிக்ஸ் (BRICS) மாநாட்டில் பங்கேற்க வந்துள்ள ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அராக்சி, மேற்காசியாவில் நிலவி வரும்…

4 மணத்தியாலங்கள் ago

எங்கடா இருந்துச்சி இவ்ளோ பணம்..? பண மழையில் நனைந்த பாடகர்.. குஜராத் பஜனை விழாவில் குவிந்த கோடிக்கணக்கான ரூபாய் நோட்டுகள் – வைரல் வீடியோ..!!

குஜராத் மாநிலம் ஜூனாகத் மாவட்டத்தில் நடைபெற்ற பஜனை நிகழ்ச்சியில் (டயரோ), பிரபல பாடகர் ஜிக்னேஷ் கவிராஜ் மீது ரசிகர்கள் கோடிக்கணக்கான…

4 மணத்தியாலங்கள் ago

BREAKING: முதல்வர் விஜய்க்கு வந்தது அதிகாரப்பூர்வ அழைப்பு…!!

கேரள முதல்வர் பதவியேற்பு விழாவில் பங்கேற்க தமிழக முதல்வர் விஜய்க்கு அதிகாரப்பூர்வ அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் நடந்த கேரள சட்டமன்றத்…

4 மணத்தியாலங்கள் ago