அம்மாவை பெல்ட்டால அடிச்சாரு பப்பா… பெண் காவலர் சடலம் மீட்பு… மகனின் வாக்குமூலத்தால் கணவன் கைது… மகாராஷ்டிராவின் அரங்கேறிய அதிர்ச்சி சம்பவம்…!

By Swetha on ஐப்பசி 14, 2026

Spread the love

மகாராஷ்டிராவின் சிந்துதுர்க் மாவட்டத்தில் கன்கவ்லி காவல் நிலையத்தில் பெண் காவலராகப் பணியாற்றிய ஸ்மிதா மானே, பித்வாடி-ஹும்பர்னே வனப்பகுதியில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அவரது கணவரும் காவலருமான சச்சின் மானே மீது வரதட்சணை மற்றும் உடல்ரீதியான கொடுமை புகாரின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஸ்மிதாவின் உடல் கண்டுபிடிக்கப்படுவதற்கு முன்பு, அவரது மகன் தனது உறவினர்களிடம், தனது தந்தை சச்சின் மானே தாயை பெல்ட்டால் அடித்ததாகவும், அதனால் அவர் குளியலறையில் விழுந்ததாகவும் தெரிவித்துள்ளார். மேலும், வீட்டின் தரையில் வெட்டப்பட்ட நீண்ட தலைமுடி முடிகள் கிடந்ததாகவும் உறவினர்கள் அளித்த புகாரில் குறிப்பிட்டுள்ளனர்.

   

ஸ்மிதா காணாமல் போனதாகக் கூறி அவரது கணவரே அக்டோபர் 8 அன்று புகார் அளித்து நாடகமாடியுள்ளார். தற்போது காவல்துறையினர் மற்றும் தடயவியல் குழுவினர் விசாரணை நடத்தி வருவதுடன், சம்பவ இடத்தில் கைப்பற்றப்பட்ட பெல்ட், ஸ்மிதாவின் செல்போன் மற்றும் சான்றுகளைப் பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர்.