“படுக்கையறையில் மனைவியின் உடல், மின்விசிறியில் தொங்கிய கணவன்”… சுவற்றில் லிப்ஸ்டிக்கால் எழுதப்பட்ட கடிதம்… சினிமாவையே மிஞ்சும் திடுக்கிடும் சம்பவம்…!

By Nanthini on கார்த்திகை 26, 2025

Spread the love

சத்தீஸ்கர் மாநிலத்தை அதிர்ச்சி அடைய செய்த ஒரு துயர சம்பவம் குறித்த தகவல் வெளியாகி பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சத்தீஸ்கர் மாநிலம் ஆவாஷ் காலனி பகுதியில் வாழ்ந்த ராஜ் தம்பே மற்றும் சிவானி தா தம்பதியினர் தனியார் நிறுவனத்தில் துப்புரவு தொழிலாளர்களாக பணியாற்றி வந்துள்ளனர். பத்து வருடங்கள் காதலித்து திருமணம் செய்து கொண்ட இவர்களுடைய வாழ்க்கை திடீரென்று துயரமாக மாறியது. கடந்த திங்கட்கிழமை இவர்களின் சடலங்கள் வீட்டில் கண்டுபிடிக்கப்பட்டன.

படுக்கையறையில் சிவானியின் உடல் இருந்த நிலையில் மின்விசிறியில் தூக்கில் தொங்கிய நிலையில் ராஜ் உடல் கண்டெடுக்கப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் இருவருடைய உடலையும் கைப்பற்றி விசாரணையை தொடங்கினர். இது முதலில் கொலை அல்லது தற்கொலை என சந்தேகத்தை எழுப்பிய நிலையில் உண்மையான அதிர்ச்சியை சுவரில் லிப்ஸ்டிக் மூலம் எழுதப்பட்டிருந்த குறிப்புதான். அதில், ராஜேஷ் விஷ்வாஷ் எங்கள் திருமண வாழ்வில் குழப்பத்தை ஏற்படுத்தினார், அவரால்தான் இந்த முடிவை நாங்கள் எடுக்க நேரிட்டது என்று எழுதப்பட்டிருந்தது.

   

இந்த லிப்ஸ்டிக் மெசேஜ் முழு வளத்தையும் புதிய திசைக்கு திருப்பி உள்ளது. சிவானியின் கழுத்தில் காயங்கள் இருப்பதும், வீட்டில் கடிதம் கைப்பற்றப்பட்டதும், ராஜ் முதலில் மனைவியை நினைத்து கொலை செய்த பிறகு தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்ற சந்தேகத்தை போலீசார் வெளிப்படுத்தியுள்ளனர். ராஜேஷ் விஷ்வாஷ் குறித்து கூடுதல் விசாரணையும் நடத்தப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.