பகீர்…. கணவன், மாமனார் அடுத்தடுத்து மரணம்…. சோகத்தில் மூழ்கிய குடும்பம்…. மாமியார் செய்த திடுக்கிடும் காரியம்…. உ . பி – யில் அதிர்ச்சி சம்பவம்…!!

By Swetha on புரட்டாதி 25, 2026

Spread the love

மாமியாரும் மருமகளும் சண்டையிட்டுக் கொள்வதையும், அதனால் குடும்பங்கள் பிரிவதையும் நாம் அடிக்கடி கேள்விப்பட்டிருப்போம். ஆனால், உத்திரபிரதேச மாநிலம் முசாபர்நகரில் மருமகளைத் தன் சொந்த மகளாகவே பாவித்து, அவரது வாழ்விற்குப் புதிய ஒளி ஏற்றி வைத்த நெகிழ்ச்சியான சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. ஹரித்வாரைச் சேர்ந்த மீனாட்சி என்பவருக்கும் ரோஹித் என்பவருக்கும் பத்து ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்து, 7 வயதிலும் ஒன்றரை வயதிலும் இரு பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த ரோஹித்தின் தந்தை கடந்த ஆகஸ்ட் 14-ஆம் தேதி காலமானார். அந்த அதிர்ச்சியிலேயே அடுத்த நாளே ரோஹித்தும் உயிரிழந்தது அந்த அமைதியான குடும்பத்தை மீள முடியாத துயரத்தில் ஆழ்த்தியது.

கணவனையும் மாமனாரையும் இழந்து தவித்த இளம் மருமகள் மீனாட்சியின் நிலையைக் கண்டு, மாமியார் சுனிதா மனமுடைந்து போனார். மீனாட்சிக்கு இன்னும் நீண்ட வாழ்க்கை காத்திருக்கிறது என்பதை உணர்ந்த சுனிதா, தனது இளைய மகன் மோஹித்தின் உதவியோடு மீனாட்சிக்கு மறுமணம் செய்து வைக்க முடிவு செய்தார். அவருக்கு ஏற்ற நல்ல வரனாக யோகேஷ் என்பவரைக் கண்டறிந்து, ஆர்ய சமாஜ் கோவிலில் எளிமையான முறையில் திருமணத்தை நடத்தி வைத்தார்.

   

ஒரு தாயின் இடத்தில் நின்று மாமியார் சுனிதா ‘கன்யாதானம்’ செய்து வைக்க, மைத்துனன் மோஹித் ஒரு சகோதரனின் கடமையை நிறைவேற்றினார். கணவனை இழந்து நின்ற மருமகளுக்கு மறுவாழ்வு அளித்து, ஒரு மகளைப் போல வழி அனுப்பி வைத்த இந்த மாமியார் மற்றும் மைத்துனனின் செயல், சமூகத்தில் உடைந்துபோகும் குடும்ப உறவுகளுக்கு மத்தியில் ஒரு சிறந்த முன்மாதிரியாகப் பேசப்பட்டு வருகிறது.