லெபனானின் தெற்குப் பகுதியில் உள்ள குடியிருப்புப் பகுதிகளில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில், சர்வதேச அளவில் தடை செய்யப்பட்ட கொடிய ‘வெள்ளை பாஸ்பரஸ்’ பயன்படுத்தப்பட்டதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. மனித உரிமைக் கண்காணிப்பகம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, கடந்த மார்ச் 3-ஆம் தேதி யோஹ்மர் நகரில் நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில் பொதுமக்கள் வசிக்கும் பகுதிகள் இலக்காக்கப்பட்டன.
மேலும் வெள்ளை பாஸ்பரஸ் என்பது காற்றில் ஆக்சிஜனுடன் தொடர்பு கொள்ளும்போது தானாகவே தீப்பற்றி எரியும் தன்மை கொண்டது இது மனித உடலில் பட்டால் எலும்பு வரை ஊடுருவி கடுமையான தீக்காயங்களையும், சுவாசக் கோளாறுகளையும், உடல் உறுப்புகள் செயலிழப்பையும் ஏற்படுத்தக்கூடிய மிகவும் ஆபத்தான வேதிப்பொருள் ஆகும்.
இந்த விவகாரம் சர்வதேச மனிதாபிமான சட்டங்களை மீறும் செயல் என்று மனித உரிமை அமைப்புகள் கடுமையாகச் சாடியுள்ளன. போர்க்களங்களில் புகை திரையை உருவாக்க மட்டுமே இதைப் பயன்படுத்த அனுமதி உள்ள நிலையில், மக்கள் வாழும் பகுதிகளில் இதைப் பயன்படுத்துவது போர்க்குற்றமாகக் கருதப்படுகிறது.
இந்தத் தாக்குதலால் வீடுகளும் வாகனங்களும் தீப்பற்றி எரிந்ததற்கான செயற்கைக்கோள் ஆதாரங்கள் கிடைத்துள்ளதாகக் கூறப்படும். நிலையில், இஸ்ரேலுக்கு இத்தகைய ஆயுதங்களை வழங்கும் நாடுகள் உடனடியாக அதை நிறுத்த வேண்டும் என்றும், குடியிருப்பு பகுதிகளில் இத்தகைய கொடூரமான ஆயுதங்கள் பயன்படுத்தப்படுவதைத் தடுக்க சர்வதேச சமூகம் அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றும் கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.
தமிழக வெற்றிக் கழகத் (தவெக) தலைவர் விஜய், 2026 தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மைக்குத் தேவையான இடங்களை உறுதி செய்து…
காட்டின் ராஜா என்று அழைக்கப்படும் சிங்கங்களின் கூட்டமே ஒரு தனி எருமையை வேட்டையாடத் துடிக்கும்போது, எதிர்பாராத திருப்பமாக எருமைக்கூட்டம் ஒன்று…
பிரித்தானியாவில் (UK) சிறார் பாலியல் குற்றவாளிகளைப் பிடிக்கும் ஒரு நடவடிக்கையின் போது, இந்திய ராணுவ அதிகாரி ஒருவரின் மகன் சிக்கியதாக…
பெங்களூருவில் திருட்டு வழக்கு ஒன்றில் கைதான நபர், காவல்துறையினர் சோதனையிடும் போது தன்னிடம் இருந்த லாக்கர் சாவியை அவர்கள் கையில்…
பாஜக நிர்வாகி வினோஜ் பி. செல்வம் தனது எக்ஸ் (X) தளத்தில், இந்துக்களுக்கு எதிரான சக்திகளுடன் கைகோர்த்துள்ள திமுகவுக்கு மாற்றாகத்…
தமிழகத்தில் ஆட்சி அமைக்கத் தேவையான பெரும்பான்மை பலம் கிடைப்பதில் இழுபறி நீடித்து வந்த நிலையில், காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள்…