‘வாரிசு’ இசை வெளியீட்டு விழாவில் நடிகர் விஜயை கட்டிப்பிடித்து…. முக்கிய பிரபலம் செய்த செயல்…. ஷாக்கான ரசிகர்கள்!….

By Begam

Published on:

‘வாரிசு’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் முக்கிய பிரபலம் ஒருவர் செய்த செயல் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகனாக வலம் வருபவர் நடிகர் விஜய். இவர் தனது ரசிகர்களால் தளபதி என அன்புடன் அழைக்கப்படுகிறார். இவர் நடிப்பில் வெளிவந்த பல படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட் ஆகியுள்ளது. இதைத் தொடர்ந்து தற்பொழுது வம்சி  இயக்கத்தில் நடிகர் விஜய் ‘வாரிசு’ திரைப்படத்தில் நடித்துள்ளார்.

   

இத்திரைப்படத்தின் இரண்டு பாடல்கள் சமீபத்தில் வெளியாகி படுவைரல் ஆனது. இதைத் தொடர்ந்து படத்தின் ப்ரோமோஷன் வேலைகளும் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டு வருகிறது. வாரிசு திரைப்படம் பொங்கலுக்கு ரிலீசாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இத்திரைப்படத்திற்கு போட்டியாக தல அஜித்தின் ‘துணிவு’ திரைப்படமும் வெளியாக உள்ளது. இந்நிலையில் வாரிசு திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடந்து முடிந்தது. 2023 ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி சன் தொலைக்காட்சியில் இந்நிகழ்ச்சி ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது.

இந்த இசை வெளியீட்டு விழாவில் படத்தில் நடித்த பிரபலங்கள் அனைவரும் கலந்து கொண்டுள்ளனர். இப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள சதீஷ் மற்றும் டி வி கணேசன் கலந்து கொண்டுள்ளனர்.

அப்பொழுது மேடையில் பேசிய நடிகர் சதீஷ் திடீரென கீழே இறங்கி வந்து நடிகர் விஜயை கட்டிப்பிடித்து அவருடைய ரசிகர்களின் சார்பில் அன்பு முத்தம் ஒன்றை கொடுத்துள்ளார். அந்த வீடியோவை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். தற்பொழுது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதோ அந்த வீடியோ…

 

View this post on Instagram

 

A post shared by Sathish (@actorsathish)