எம்.எஸ். தோனியின் 45-வது பிறந்தநாளை முன்னிட்டு, ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் அவரது ரசிகர்கள் பிரம்மாண்ட கட்-அவுட்களுக்கு பாலாபிஷேகம் செய்து தங்களது கொண்டாட்டங்களை அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளனர். ஜூலை 7-ஆம் தேதி தோனியின் பிறந்தநாள் கொண்டாடப்பட உள்ள நிலையில், அதற்கு ஒரு நாளுக்கு முன்னதாகவே விஜயவாடாவில் ரசிகர்கள் பெருந்திரளாகக் கூடி இந்த கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சமூக வலைதளங்களில் இது தொடர்பான வீடியோக்கள் தற்போது தீயாய் பரவி வருகின்றன.
https://www.instagram.com/reel/DaaTWi1z_cC/?utm_source=ig_web_button_share_sheet
ரசிகர்களால் நிறுவப்பட்ட இந்த பிரம்மாண்ட கட்-அவுட்களில், தோனி இந்திய கிரிக்கெட் அணியின் சீருடை மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணியின் சீருடை அணிந்திருப்பது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன. தென்னிந்தியாவில் தங்களுக்குப் பிடித்தமான விளையாட்டு மற்றும் திரை நட்சத்திரங்களை கௌரவிக்கும் பாரம்பரிய வழக்கப்படி, ரசிகர்கள் இந்த கட்-அவுட்களுக்கு பாலாபிஷேகம் செய்து, விண்ணதிர முழக்கங்களை எழுப்பி தங்களது அன்பு மற்றும் மரியாதையை வெளிப்படுத்தியுள்ளனர்.
இந்திய கிரிக்கெட்டின் மிகச் சிறந்த கேப்டன்களில் ஒருவரான தோனிக்கு, சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பிறகும் நாடு முழுவதும் உள்ள ரசிகர்களிடையே இருக்கும் மிரட்டலான மவுசு சற்றும் குறையவில்லை. ஒவ்வொரு ஆண்டும் அவரது பிறந்தநாளை கேக் வெட்டியும், தொண்டு நிறுவனங்களுக்கு உதவியும், பைக் ரேலிகள் நடத்தியும் ரசிகர்கள் கொண்டாடி வரும் வேளையில், இந்த ஆண்டும் விஜயவாடா நகரம் தோனியின் 45-வது பிறந்தநாள் கொண்டாட்டத்தை முதன்முதலில் பறைசாற்றி முன்னெடுத்துள்ளது.
