நம் உடலை பேணுவதற்கு பலவிதமான முயற்சிகள் எடுப்போம். ஆனால் நம் வீட்டில் இருக்கும் சிறு சிறு பொருட்கள் மூலமாகவே நம் உடல் நலனை பாதுகாக்க முடியும். அவை நமக்கு அதிக பலன் தரும். அதில் ஒன்றுதான் நாம் அன்றாடம் சமையலில் பயன்படுத்தும் சீரகம். உடலை சீராக்குவது சீரகம் என்ற பழமொழியே இருக்கிறது. அதனால் இந்த சீரகத்தை யார் எப்படி சாப்பிட்டால் என்ன பலன்கள் கிடைக்கும் என்பதைப் பற்றி இனி காண்போம்.

நீங்கள் வெயிட் லாஸ் டயட்டில் இருந்தால் சீரகம் உங்களுக்கு மிகவும் உபயோகப்படக்கூடிய ஒரு பொருளாகும். தினமும் இரவு சீரகத்தை தண்ணீரில் போட்டு ஊற வைத்து மறுநாள் அந்த தண்ணீரை பருகலாம். இல்லையென்றால் சீரகத்தை கொதிக்க வைத்து அந்த நீரை பருகும் போது உடல் எடையை குறைக்க இது உதவுகிறது.
சீரகத்தை நாட்டு சர்க்கரையோடு சேர்ந்து சாப்பிடும் போது தேக பலம் கிடைக்கும். கற்கண்டு கூட சீரகத்தை சேர்த்து சாப்பிடும் போது இருமல் தீரும். சீரக பொடியோடு வெண்ணெய் சேர்த்து சாப்பிட்டு வந்தால் வயிற்றுப்புண் வயிற்று எரிச்சல் குடல் சம்பந்தமான பிரச்சனைகள் தீரும்.
சீரகத்தை நிறைய போட்டு ரசம் வைத்து சாப்பிடும் போது அது வாந்தி தலைவலி போன்றவற்றை சரி செய்யும். சீரகத்தில் ஆன்டி-ஆக்ஸிடன்ட் பண்புகள் அதிகம் இருக்கின்றன. அதனால் இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும். சீரகத்தை தினமும் உணவில் சேர்த்துக்கொண்டு வரும்போது குழந்தைகள் பெரியவர்கள் என அனைவரின் நினைவாற்றலை அதிகரிக்கும்.

பெண்கள் மாதவிடாயினால் வயிற்று வலியால் அவதிப்படும் பெண்கள் சீரகத் தண்ணீர் குடிக்கும் போது அதிலிருந்து விடுபடலாம். வாயு தொல்லையால் அவதிப்படுபவர்கள் சீரகத்துடன் இஞ்சி உப்பு சேர்த்து குடிக்கும்போது அது உடனே சரியாகும். இத்தகைய சீரகத்தில் பல மருத்துவ பயன்கள் இருக்கிறது. இனி அதிகப்படியாக உங்களுடைய உணவில் சீரகத்தை சேர்த்துக் கொள்ளுங்கள்.
