தினமும் கண்களை பராமரிப்பது எப்படி…? கண் ஆரோக்கியத்திற்கு இப்படி செய்யுங்க…

By admin on புரட்டாதி 24, 2024

Spread the love

நம் உடம்பில் மிக முக்கியமான பாகம் என்றால் அது கண்தான். கண் இருந்தால் தானே உலகில் இருக்கும் அத்தனையும் அழகையும் பார்க்க முடியும் ரசிக்க முடியும். கண்ணில்லை என்றால் வாழ்க்கையே இருள் தான். அப்படி நம் உடம்பில் முக்கியமான பாகமாக இருக்கும் கண்களை தினமும் பராமரிப்பது எப்படி ஆரோக்கியமான கண்களை பெறுவது எப்படி என்பதை பற்றி இனி காண்போம்.

   

கண்கள் ஆரோக்கியமாக இருக்க தெளிவான பார்வை பெற அதை பராமரிக்க வேண்டியது அவசியம். கண்களுக்கு போதுமான ஈரப்பதம் உணவு ஊட்டங்கள் சரியான உடற்பயிற்சி அளித்து வந்தால் கண்கள் ஆரோக்கியமாக இருக்கும். முதலாவதாக கண்கள் ஆரோக்கியமாக இருக்க நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும்.

   

அடுத்ததாக வைட்டமின் ஏ மற்றும் கே அதிகமாக இருக்கும் காய்கறிகள் மற்றும் பழங்களை சாப்பிட வேண்டும். கண்பார்வைக்கு வைட்டமின்கள் கண்டிப்பாக தேவை. இப்போதைய காலகட்டத்தில் அதிகமாக ஸ்மார்ட்போன்களையும் கம்ப்யூட்டர்களையும் பார்த்து வேலை பார்ப்பவர்கள் இருக்கிறார்கள்.

 

அதனால் படிக்கும் போதோ கணிப்பொறியில் வேலை பார்க்கும் போதோ ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறை ஒரு ஐந்து நிமிடம் இடைவெளி எடுத்து கொள்ளுங்கள். இப்படி செய்வதன் மூலம் கண்களின் தசைகள் ஓய்வு பெறும். கண்களின் மீது தண்ணீர் தெளித்து கண்களை ஒரு ஐந்து நிமிடத்திற்கு மூடி கொள்ளுங்கள். பிறகு உங்களது வேலையை நீங்கள் தொடரலாம்.

கண்களுக்கு தினமும் பயிற்சி அளிக்க வேண்டும். கண்மணிகளை வட்ட வடிவில் இடது புறம் வலது புறம் என சுழற்ற வேண்டும். தினமும் இந்த பயிற்சிகளை செய்வதால் கண்கள் ஈரப்பதத்தை பெரும். இதனால் கண்கள் ஆரோக்கியமாக இருக்கும். தினமும் எட்டு மணி நேரம் ஆழ்ந்து தூங்க வேண்டும். நிம்மதியான தூக்கம் இருந்தால்தான் முகமும் கண்களும் தெளிர்ச்சையாக இருக்கும்.

காலையில் எழுந்த உடனேவோ அல்லது கண்ணில் தூசி பட்டு விட்டாலோ கண்களை கசக்க கூடாது. தண்ணீரை வைத்து கழுவ வேண்டும். வெயிலில் செல்லும்போது நேரடியாக கண்களில் புற ஊதாக்கதிர்கள் படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். ஸ்மார்ட்போன் டிவி லேப்டாப் போன்றவற்றின் ஒளிகள் கண்களில் அதிக நேரம் படாமல் பார்த்துக் கொள்ளுங்கள். இவ்வாறு செய்யும்போது நமது கண்கள் ஆரோக்கியமாகவும் வசீகரமாகவும் இருக்கும்.