குடும்பத்தில் ஏற்பட்ட பகை காரணமாகவோ ஒருவர் நம்மை விட மேலே சென்று விடக்கூடாது என்றாலோ ஒருவரை நமக்கு பிடிக்கவில்லையே என்றாலோ செயப்படுவது தான் பில்லி சூனியம் ஏவல் போன்றவைகள் ஆகும். ஒரு சில மந்திரவாதிகளின் மூலம் மந்திர சொற்களை உபயோகப்படுத்தி செய்வினை கோளாறுகள் செய்து வைப்பார்கள். இதுபோல ஒரு குடும்பத்திற்கு செய்வினை வைத்து விட்டால் அந்த குடும்பத்தில் அடுத்தடுத்து கெட்ட சம்பவங்கள் நிகழும். என்னதான் ஒருவர் நல்லவராக இருந்தாலும் அடுத்தவரால் இந்த செய்வினை கோளாறு வைக்கப்பட்டு விட்டால் அவர்களுக்கு கெட்ட நேரம் இருந்தால் அது அவங்களை பிடித்து ஆட்டிப் படைக்கும் என்று ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. இப்படி ஒரு குடும்பத்திற்கு செய்வினை கோளாறுகள் இருந்தால் எப்படி கண்டுபிடிப்பது என்பதை பற்றி இனி காண்போம்.

முதலில் செய்வினை கோளாறுகள் இருந்தால் குடும்பத்தில் முக்கியமான நபர்களுக்கு காலில் கட்டைவிரலில் நிலை வாசலில் அடிப்படும். நிலை வாசலில் குலதெய்வம் குடியிருப்பதாக கூறுவார்கள். இதனால் வீட்டு வாசலுக்கு அருகே ரத்தம் ஏற்படும்படி அடிபட்டால் அது குலதெய்வம் நமக்கு விடும் எச்சரிக்கையாக கூறப்படுகிறது.
காகங்களும் பல்லிகளும் தெய்வ அம்சம் கொண்டதாக கூறப்படுகிறது. அதனால் அடிக்கடி காகம் நம் வீட்டை நோக்கி கரைவது இல்லை என்றால் காகம் நம் வீட்டு திசைக்கே வராமல் இருப்பது பல்லிகள் நடமாட்டம் இல்லாமல் இருப்பது வீட்டில் துஷ்ட சக்திகள் இருப்பதாக கூறப்படுகிறது. தேவையே இல்லாமல் வீட்டில் சண்டை சச்சரவுகள் ஏற்படுவது சிறு விபத்துக்கள், எதிர்பாராத விதமாக செலவுகள், வீட்டில் எப்போதுமே இருள் அடைந்தது போல் இருப்பது ஆகியவை செய்வினை கோளாறுகளால் வீட்டிற்குள் கெட்ட சக்தி இருப்பதாக கூறப்படுகிறது.
ஒருவர் வீட்டில் செய்வினை வைத்து விட்டால் அவர்கள் எந்த ஒரு நல்ல காரியத்தை ஆரம்பித்தாலும் அது தடைப்பட்டு கொண்டே இருக்கும். சிலர் குலதெய்வ கோவிலுக்கு போக வேண்டும் என்று மாத கணக்கில் நினைத்திருப்பார்கள் ஆனால் கோவிலுக்கு செல்ல விடாமல் அது தடுக்கும். அவர்கள் வீட்டில் வளர்க்கும் செடி வகைகள் துளசி செடி, வேப்பஞ்செடி போன்றவை கருகி போகும். விளக்கு ஏற்றி வைத்தாலும் நின்று விட்டு எறியாமல் சில நேரம் அணைந்து விடும். இப்படிப்பட்ட அறிகுறிகள் தெரிந்தால் அவர்கள் வீட்டில் செய்வினை கோளாறுகள் இருக்கிறது என்று அர்த்தம் ஆகும் என்று ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.

இனி செய்வினை கோளாறுகள் நம் வீட்டில் இருப்பது என்று கண்டுபிடித்து விட்டால் அதற்கு அடுத்ததாக என்ன செய்வது என்றால் உடனே எதையும் யோசிக்காமல் நம் குலதெய்வ கோவிலுக்கு சென்று மனதார வேண்டிக்கொண்டு வரவேண்டும். இல்லை என்றால் நம் இஷ்ட தெய்வத்தை வணங்கி அனைத்தையும் கடவுளிடம் ஒப்படைத்துவிட்டு நம் குடும்பத்தை காப்பாற்றும்படி வேண்டலாம். சிலர் சாமிகளை கூப்பிட்டு வீட்டில் பரிகாரம் செய்பவர்களும் இருக்கிறார்கள். ஆனால் திக்கற்றவர்களுக்கு தெய்வமே துணை என்பது போல் தெய்வத்திடம் ஒப்படைத்து விட்டால் கண்டிப்பாக நமக்கு அருள் ஆசி புரிவார்கள்.
