சுமங்கலி பூஜை செய்வது எப்படி…? வழிபடும் முறைகள் என்ன தெரியுமா…?

Spread the love

பெண்கள் செய்யும் பூஜைகளில் மிக முக்கியமான பூஜை சுமங்கலி பூஜை. திருமணமான பெண்கள் தான் இறக்கும் வரையிலும் விரும்பும் முதல் விஷயம் சுமங்கலியாக இருக்க வேண்டும் தனது கணவர் நீண்ட ஆயுளோடு இருக்க வேண்டும் என்பதுதான். அப்படி சுமங்கலி ஆனவள் அம்பாளை நினைத்து பூஜிக்கும் போது தீர்க்க சுமங்கலி ரத்தை பெறுவதாக ஐதீகம். இந்த பூஜையை ஆண்டுதோறும் வழக்கமாக செய்வார்கள். இதை எப்படி முறையாக செய்வது என்பதை பற்றி இனி காண்போம்.

திருமணமான பெண்கள் தங்கள் கணவன் நீண்ட ஆயுளோடு இருக்கவும் திருமணம் ஆகாத பெண்கள் திருமண தடை நீங்கி மாங்கல்ய வரம் கிடைக்கவும் சுமங்கலி பூஜை நடத்தப்படுகிறது. சுமங்கலி என்றால் மங்களம் நிறைந்தவள் என்று பொருள். அம்பிகையின் நாமங்களில் ஒன்றான சுகாசினி என்ற பெயரிலிருந்து தான் சுமங்கலி என்ற பெயர் வந்தது.

திருமணமான பெண்களை சுமங்கலி என்று அழைப்பார்கள். குடும்பத்தை சீரோடும் சிறப்போடும் திறம்பட வழி நடத்தும் பெண்கள் சக்தியின் வடிவமாகவே போற்றப்படுகின்றனர். சுமங்கலி பெண்கள் ஒன்று சேர்ந்து நடத்தும் பூஜை ஆன சுமங்கலி பூஜை சக்தி வழிபாடாகவே போற்றப்படுகிறது.

நீங்கள் சுமங்கலி பூஜை செய்ய வேண்டும் என்று விரும்பினால் ஞாயிறு, திங்கள், புதன், வியாழன், வெள்ளி ஆகிய நாட்களில் தான் நடத்த வேண்டும். சனி மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் சுமங்கலி பூஜை நடத்தக்கூடாது. இந்த தினங்களில் நீங்கள் சுமங்கலி பூஜை செய்ய முடிவெடுத்துவிட்டால் அன்றைய தினத்தில் வரும் பஞ்சாங்கத்தை பார்த்து யோகம் திதி போன்றவற்றையும் கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும். கரிநாளில் சுமங்கலி பூஜை நடத்தக்கூடாது மற்றும் ராகு காலம் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். நவராத்திரி நாட்களில் சுமங்கலி பூஜை நடத்துவது மேலும் சிறப்பா பலன்களை கொடுக்கும்.

சுமங்கலி பூஜை செய்வோர் வீட்டை தூய்மையாக சுத்தம் செய்துவிட்டு வீட்டில் உள்ளேயும் வாசலிலும் அழகான மாக்கோலங்களை இடவேண்டும். மாவிலை தோரணங்கள் கட்ட வேண்டும். பூஜை செய்வோர் அக்கம் பக்கத்தில் இருக்கும் சுமங்கலிப் பெண்களை அழைத்து அனைவரையும் அமர வைத்து பூஜை நடத்தி ஒரு தாம்பூலத்தில் குங்குமம் சந்தனம் கண்ணாடி வளையல் கண்ணாடி சீப்பு ஜாக்கெட் துணி பூ மருதாணி வெற்றிலை பாக்கு ஆகியவற்றை வைத்து அவர்களுக்கு தர வேண்டும். இப்படி அவர்களுக்கு தானமாக கொடுப்பது போல் செய்வது உங்களை தீர்க்க சுமங்கலியாக வாழ்தற்கு அம்பாள் ஆசி புரிவாள்.

மேலும் சுமங்கலி பூஜைக்கு வரும் பெண்களுக்கு குடிப்பதற்கு பாலும் பழமும் கொடுக்க வேண்டும். இது மட்டுமில்லாமல் முடிந்தவர்கள் அவர்களுக்கு அறுசுவை உணவு அளித்து அவர்களுக்கு தாம்பூலத்தை கொடுப்பதன் மூலம் அவர்கள் மனம் குளிர்ந்து நாம் நன்றாக இருக்க வேண்டும் என்று வாழ்த்துவார்கள். இவை எல்லாம் செய்து அவர்களை மரியாதையோடு வழி அனுப்பி வைத்த பிறகுதான் வீட்டில் உள்ளவர்கள் உணவருந்த வேண்டும்.

சுமங்கலி பூஜை செய்வதால் இல்லத்தில் செல்வம் பெருகும் குலவிருத்தி உண்டாகும் திருமணம் தடைபடுபவர்களுக்கு விரைவில் திருமணம் நடக்கும். அவரவர் தகுதிக்கேற்ப ளிமையாக கூட சுமங்கலி பூஜையை செய்யலாம். பிரம்மாண்டாக தான் செய்ய வேண்டும் என்பதில்லை. தங்களால் முடிந்த அளவுக்கு சுமங்கலிகளை அழைத்து அவர்கள் தாம்பூம் கொடுப்பதன் மூலம் தீர்க்க சுமங்கலியாக வாழும் பாக்கியத்தை பெறலாம்.

admin

Recent Posts

BIG BREAKING: விஜய் முதல்வராவதில் சிக்கல்..? அதிர்ச்சியில் தவெக தொண்டர்கள்…!!

தமிழகத்தில் ஆட்சி அமைக்க உரிமை கோரியுள்ள தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யிடம், பெரும்பான்மையை நிரூபிக்கத் தேவையான 118 எம்.எல்.ஏ-க்களின்…

3 minutes ago

சென்னை முதல் கன்னியாகுமரி வரை.. தமிழகத்தின் 20 மாவட்டங்களில் கனமழை அலர்ட் – லிஸ்டில் உங்க ஊர் இருக்கா..?

தமிழகத்தில் கோடை வெயில் தொடங்கிய நாள் முதலே பரவலாக மழை பெய்து வரும் நிலையில், இன்று இரவு 7 மணி…

3 minutes ago

எம்.எல்.ஏ ஆனதும் இப்படியா..? கையில் பீர் பாட்டிலுடன் ஆட்டம் போடும் தவெக MLA … வைரலாகும் பகீர் வீடியோ…!!

தஞ்சாவூர் சட்டமன்றத் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற விஜய் சரவணன், கையில் பீர் பாட்டிலுடன்…

15 minutes ago

“ஒரே நாளில் இரட்டை கொண்டாட்டம்” விஜய்யின் வெற்றியையும் த்ரிஷாவின் பிறந்தநாளையும் முடிச்சுப் போட்ட பிரபலங்கள்..!!

நடிகை த்ரிஷா தனது பிறந்தநாளை மே 4-ம் தேதி கொண்டாடினார். அதே நாளில் நடிகர் விஜய்யின் 'தமிழக வெற்றிக் கழகம்'…

20 minutes ago

இபிஎஸ்-க்கு கெடு விதிக்கும் சி.வி.சண்முகம்..? அதிமுக-வில் உச்சகட்ட பரபரப்பு.. தவெக கூட்டணியால் அதிரும் அரசியல் களம்..!!

தமிழக அரசியலில் நிலவும் தற்போதைய பரபரப்பான சூழலில், அதிமுக-வின் மூத்த தலைவர்களான சி.வி. சண்முகம் மற்றும் எஸ்.பி. வேலுமணி ஆகியோர்…

22 minutes ago

தலைவர்கள் சிலைக்கு அவமதிப்பா..? பேரறிஞர் அண்ணா கையில் தவெக கொடியை திணித்த தொண்டர்கள்.. கொந்தளிக்கும் அரசியல் கட்சிகள்..!!

தமிழக சட்டமன்றத் தேர்தல் வெற்றிக் கொண்டாட்டங்களின் போது, தமிழக வெற்றிக் கழகத்தினர் பேரறிஞர் அண்ணாவின் சிலையின் கையில் தங்கள் கட்சியின்…

25 minutes ago