உங்க வீட்டு பாத்ரூம் டைல்ஸ் கறை என்ன பண்ணாலும் போகலையா?… இதோ இந்த 3 பொருள் இருந்தா போதும்… அப்படியே புதுசு போல மாறிடும்…!

By Nanthini on ஐப்பசி 28, 2025

Spread the love

நம் வீட்டின் மற்ற இடங்களில் சுத்தமாக இருக்கின்றதோ இல்லையோ சமையலறை மற்றும் குளியலறையை எப்போதுமே சுத்தமாக வைத்திருக்க வேண்டும். ஆனால் முழு வீட்டையும் தினந்தோறும் சுத்தம் செய்யும் நாம் கிருமிகள் மற்றும் அழுக்குகள் அதிகமாக இருக்கக்கூடிய குளியலறை கழிவறையை தினமும் சுத்தம் செய்ய மறந்து விடுகிறோம். வெறும் தண்ணீரை ஊற்றி சுத்தம் செய்வதோடு சில டிப்ஸ்களை பயன்படுத்தினால் உங்க வீட்டு பாத்ரூம் புதுசு போல மாறிவிடும். பலரும் குளியலறையில் துர்நாற்றம் வீசக்கூடாது என்பதற்காக ஸ்பிரே வாங்கி பயன்படுத்துகின்றனர். குளியலறையை வாசனையாக வைத்திருப்பது தான் சுத்தம் என்று நினைத்துக் கொண்டு அதற்காக நிறைய செலவு செய்கிறார்கள்.

ஆனால் அழுக்குகள் இல்லாமல் வைத்திருந்தாலே துர்நாற்றம் இல்லாமல் சுத்தமாக இருக்கும். மற்ற இடங்களை விட பாத்ரூம் டைல்களில் அதிகமான அழுக்குகள் இருக்கும். இதனை ஒரே வாஷில் சுத்தம் செய்து பளிச் செய்யும் ரசாயனங்கள் அதிகம் கொண்ட தயாரிப்புகள் மார்க்கெட்டுகளில் கிடைத்தாலும் அவை உங்கள் வீட்டு டைல்களை சேதப்படுத்தி விடும். இதற்கு நீங்கள் வீட்டில் உள்ள எளிய பொருட்களை பயன்படுத்தி சுத்தம் செய்யலாம்.

   

அதற்கு குளிர்ந்த நீரை பயன்படுத்துவதை விட வெந்நீர் பயன்படுத்துவது நல்லது. வெந்நீர் கடினமான கறைகளை இலகுவாக்கும். அடுத்து அதில் அதிக ரசாயனங்கள் இல்லாத டிடர்ஜென்ட் பவுடர் சேர்த்து சிறிது வினிகரும் சேர்த்து கலந்து பிரஷ்ஷால் டைல்களில் தேய்த்து விடுங்கள். எலுமிச்சை சாறும் சிறிது சேர்த்துக் கொள்ள வேண்டும். பிரஷ் கடினமாக இல்லாமல் இருக்க வேண்டும். அது டைல்களில் கீரல்கள் ஏற்படாமல் தடுக்கும். இதையெல்லாம் போட்டுவிட்டு 15 முதல் 20 நிமிடங்கள் அப்படியே ஊற விட வேண்டும். பிறகு மீண்டும் வெந்நீர் பயன்படுத்தி கழுவி விடுங்கள். பிறகு புதுசு போல உங்க பாத்ரூம் ஜொலி ஜொலிக்கும்.

   

வீட்டுக்கு எப்படி வெளியில் இருந்து வரும் சூரிய வெளிச்சம் முக்கியமோ அதைவிட அதிகமாக பாத்ரூம்களில் வெளிச்சம் இருப்பது அவசியம். நல்ல காற்றும் போதிய வெளிச்சமும் இருந்தாலே பாத்ரூம்களில் அதிகமாக கறை படிவதோ அழுக்காவதோ துர்நாற்றம் வீசுவதையோ தடுத்துவிட முடியும். பாத்ரூம் டைல்ஸ் களை ஈரப்பதம் இல்லாமல் பார்த்துக் கொண்டாலே துர்நாற்றம் இல்லாமல் இருக்கும். பாத்ரூமில் இருக்கும் ஜன்னல்களை முடிந்த வரை திறந்து வைத்திருங்கள். குறிப்பாக வீட்டில் உள்ள வினிகர் மற்றும் பேக்கிங் சோடா போன்ற பொருட்களை பயன்படுத்தி உங்கள் வீட்டு பாத்ரூம் கரைகளை சுத்தம் செய்யலாம்.