வீட்டிலுருந்தபடியே 5 நிமிடத்தில்… ஆதார் செல்போன் நம்பரை இனி எளிதாக மாற்றலாம்… UIDAI மகிழ்ச்சி அறிவிப்பு…!!

By Soundarya on கார்த்திகை 28, 2025

Spread the love

ஒவ்வொரு இந்தியர்களுக்கும் மிக முக்கியமான ஆவணம் ஆதார் அட்டை. அரசு வழங்கும் பல நலத்திட்டங்கள் முதல் வங்கி கணக்கு தொடங்குதல், பான் கார்டு, பாஸ்போர்ட் விண்ணப்பித்தல் ஆகிய அனைத்துக்கும் ஆதார் அட்டை தவிர்க்க முடியாதது ஒன்றாக இருக்கிறது . ஆதாரில் செல்போன் நம்பர் இணைப்பு என்பது மிக கட்டாயம். ஒருவேளை நம்பர் இணைக்கப்பட்டு மீண்டும் இதை மாற்ற நினைத்தால் சிரமம் இருந்து வந்தது.

இந்நிலையில் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ள தொலைபேசி எண்ணை மாற்ற இனி நீண்ட வரிசையில் காத்திருக்க தேவையில்லை என UIDAI அறிவித்துள்ளது. இனி எளிதாக வீட்டில் இருந்தபடியே மாற்றிக்கொள்ளலாம் என அறிவித்துள்ளது. பயனர்கள் தங்கள் போனில் “ஆதார் APP”-ஐ பதிவிறக்கம் செய்து, அதில் OTP மற்றும் முக அங்கீகாரம் (Face Authentication) மூலம் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ள செல்போன் எண்ணை மாற்றிக்கொள்ளலாம்.