நாட்டில் பல வகையான நன்மை பயக்கும் நலத்திட்டங்கள் இயங்கி வரும் நிலையில், ஆயுஷ்மான் பாரத் பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கிய திட்டத்தை இந்திய அரசு நடத்தி வருகிறது. இந்தத் திட்டத்தில் இலவச சிகிச்சையின் பலனை பெற நீங்கள் விரும்பினால், அதற்கு முதலில் ஆயுஷ்மான் கார்டை பெற்றிருக்க வேண்டும்.
ஆயுஷ்மான் அட்டையை 24 மணி நேரத்தில் உருவாக்க விரும்பினால், உங்கள் ரேஷன் அட்டையில் உங்கள் பெயர் சேர்க்கப்பட்டிருத்தல் வேண்டும்.
- இதை உருவாக்க https://beneficiary.nha.gov.in/ என்ற இணையதளத்திற்கு சென்று, அங்கே வலது பக்கத்தில் உள்ள loginஐ கிளிக் செய்யவும்.
- பின் ‘Beneficiary‘ என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, உங்கள் மொபைல் எண்ணிற்கு வரும் OTP மற்றும் கேப்சாவை நிரப்பி, உள்நுழைய வேண்டும்.
- பிறகு PMJYவை தேர்ந்தெடுத்து, உங்கள் மாநிலம் மற்றும் மாவட்டத்தை தேர்ந்தெடுக்க வேண்டும்.
- பின் தேடல் விருப்பத்தில், 12 இலக்கு ஆதார் எண்ணை நிரப்ப வேண்டும்.
- அதில் ஒரு பட்டியல் திறக்கும், அதில் நீங்கள் உங்கள் பெயரை தேர்ந்தெடுத்து சரி பார்க்க வேண்டும்.
- பிறகு நீங்கள் உங்கள் புகைப்படத்தை இங்கே பதிவிறக்க வேண்டும்.
- இங்கே கேட்கப்பட்ட தேவையான தகவல்களை நிரப்பி சமர்ப்பிக்கவும்.
- 24 மணி நேரத்திற்கு பிறகு மீண்டும் உள்நுழைந்து, உங்கள் ஆயுஸ்மான் அட்டை உருவாக்கப்பட்டுள்ளதா? இல்லையா? என்பதை சரி பார்த்துக் கொள்ளவும்.
இந்த கார்டு பிஎம்ஜேஏஒய் திட்டத்திற்கு தகுதியானவர்களுக்கு வழங்கப்படுகிறது. இது ஆயுஷ்மான் பாரத் சுகாதாரக் கணக்குடன் இணைக்கப்பட்டு, இலவச மருத்துவ சிகிச்சை கிடைக்கும். இந்தக் கார்டில் உள்ளவர்கள், தகுதி உள்ள மருத்துவமனைகளில், பணம் இல்லாமல் & ஆவணம் இல்லாமல் சிகிச்சை பெறலாம்.
