பாஜக தேசிய செயற்குழு உறுப்பினரான எச்.ராஜா. இவருடன் சினிமாவை பொருத்திப் பார்க்கவே முடியாது. அப்படியிருந்தும் எப்படி சினிமாவில் ஹீரோவானார். ஆடிட்டர் அரசியல்வாதியான இவர் தனது அதிரடி பேச்சால் கட்சிக்காரர்களை ஈர்ப்பவர். எதிர்க்கட்சிகளை வயிற்றிலேயே புளி கரைக்க வைப்பவர். தமிழகத்தில் தேசிய அளவிலான கட்சிப் பொறுப்புகளில் தலைவராக இருந்த எச். ராஜா. எப்படி சினிமாவில் ஹீரோவானார் என்பது நம்ப முடியாத ஒன்று. இயக்குனர் வீர முருகன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘கந்தன் மலை’ படத்தின் முதல் போஸ்டரை வெளியிட்ட நிலையில் தான் நம்பாமல் இருக்க முடியவில்லை.
இந்தநிலையில் பேட்டி ஒன்றில் பேசிய எச்.ராஜா பலர் சினிமாவில் இருந்த அரசியலுக்கு வருகின்றனர். ஆனால் நான் அரசியலில் இருந்து சினிமாவிற்கு வந்திருக்கிறேன். அதன் காரணம் அவரது நண்பரான வீர முருகன் படம் எடுக்க வேண்டும் என்று கூறினார். இந்தக் கதை திருப்பரங்குன்றம் மலையைச் சுற்றியுள்ள பகுதியில் நடக்கும் உண்மை சம்பவத்தின் அடிப்படையில் உருவாகியுள்ளது என்றும் .இதில் கந்தன் மலை பகுதியில் ஊர் தலைவராக முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறேன் என்று கூறினார். ஹீரோவை மையமாகக் கொண்டு இந்த படத்தை எடுக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் எனக்கு ஜோடியாக நடிக்க ஹீரோயின் இல்லை .இதில் காமெடி, பொழுதுபோக்கு மற்றும் பாடல் என அனைத்தும் இருக்கிறது. இந்த படத்தில் சரவணன் தர்மன் என சிலர் நடித்துள்ளனர். படம் பிடிப்பு பெரும்பாலும் முடிந்து விட்டது என்று கூறினார். அரசியலில் நீங்கள் பேசும் பேச்சுகள் அனைத்தும் ட்ரெண்டிங் ஆகிவிடும். அதேபோல் சினிமாவும் இருக்கும் என நினைத்தீர்களா என்று கேட்டதற்கு ,திருப்பரங்குன்றன் முருகன் அருள் எனக்கு இருக்கு என்றும் அதைப்போல மக்களுக்கிடையே ஆதரவு கிடைக்கும் என்று கூறினார்.
பெருவின் சான் ஜுவான் டி லூரிகாஞ்சோ பகுதியில் உள்ள காம்போய் நகர்ப்புறப் பிரிவில் அதிர்ச்சியளிக்கும் குற்றச்சம்பவம் ஒன்று நடந்துள்ளது. சாலையில்…
பாலியல் வன்கொடுமை மற்றும் அது தொடர்பான வன்முறைகள் தொடர்பான காணொளிகளைப் பகிர்வதோ, அது குறித்துத் தனிநபர்களைத் திரட்டிப் பின்தொடர்வதோ சட்டப்பூர்வமாகவும்…
சிபிஎம் தலைவர் பி. சசியின் சகோதரரான பி. சரசன் (54) அடூர் பாலம் அருகே நிகழ்ந்த பயங்கரச் சாலை விபத்தில்…
தெலங்கானா மாநிலம் பூபாலபள்ளி மாவட்டத்தில் குடும்பத் தகராறு காரணமாகத் தனது காதலனுடன் சேர்ந்து கணவரைக் கொடூரமாகக் கொலை செய்த மனைவி…
ஜாலான் மாவட்டம் குடவுந்த் காவல் எல்லைக்குட்பட்ட தூங்கர்பூர்வா கிராமத்தில், மொபைல் போன் தொடர்பான தகராறில் 8 வயது சிறுவன் ஒருவன்…
குஜராத் மாநிலம் வடோதராவின் நவி ராம்வாடி பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த சிஎன்ஜி கார் ஒன்று திடீரென தீப்பற்றி, எதிர்பாராதவிதமாக பயங்கர சத்தத்துடன்…