காலையில் எழுந்து பல் துலக்குவது வாயை சுத்தம் செய்யவும், வாய்வழி ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவுகிறது. பல் துலக்குவதால் பற்கள் சுத்தமாகவும் உறுதியாகவும் இருக்கும். ஒரு சிலர் நீண்ட காலமாக ஒரே டூத் பிரஷ்ஷை உபயோகப்படுத்துகின்றனர். அப்படி செய்யக்கூடாது. பல் துலக்கும் பிரஷ்ஷை பொதுவாக 3,4 மாதங்களுக்கு ஒரு முறை மாற்ற வேண்டியது அவசியம்.
அதன் தூரிகைகள் தேய்ந்து விட்டாலோ, வளைந்து விட்டாலோ உடனடியாக பிரஷ்ஷை மாற்ற வேண்டும். சளி, காய்ச்சல் வேறு ஏதாவது தொற்றிலிருந்து மீண்ட பிறகும் பிரஷ்ஷை மாற்ற வேண்டும். நாட்கள் செல்ல செல்ல பல் துலக்குவதில் பாக்டீரியா மற்றும் பூஞ்சை சேர்கின்றன. இது வாய் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். அதனை தவிர்ப்பதற்காக 3,4 மாதங்களில் பிரஷ்ஷை மாற்ற வேண்டும்.
