நாராயணன் விஜயராஜ் அழகர்சாமி என்கிற விஜயகாந்த் ‘கேப்டனாக’ மாறியது எப்படி..?

By Begam on மார்கழி 28, 2023

Spread the love

1980 மற்றும் 1990களில் தமிழ் சினிமாவில் அதிரடி ஆக்சன் நாயகனாக கலக்கியவர் கேப்டன் விஜயகாந்த். எந்த ஒரு சினிமா பின்னணியும் இல்லாமல் திரையுலகில் கால் பதித்து தனது நடிப்பால் உச்சத்தை தொட்டவர். சினிமாவில் மட்டுமின்றி அரசியலிலும் அதிரடியாக நுழைந்து, கலைஞர் கருணாநிதி மற்றும் ஜெயலலிதா என்ற இரண்டு மாபெரும் தலைவர்களுக்கு  எதிர்க்கட்சியாகவும் செயல்பட்டவர் .

actor Vijayakanth

   

கடந்த சில வருடங்களாக இவர் உடல் நலமின்றி தொடர் சிகிச்சையில் இருந்து வந்தார் இதைத்தொடர்ந்து. நேற்று இவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, மூச்சு விடுவதில் சிரமம் இருப்பதாக மருத்துவமனை அறிக்கை வெளியிட்டிருந்தது. இதை தொடர்ந்து தீவிர சிகிச்சை அளித்தும் பலனளிக்காமல் இன்று அதிகாலை அவர் உயிரிழந்தார்.

   

 

நடிகர் விஜயகாந்தின் மறைவால் தற்பொழுது ஒட்டுமொத்த தமிழகமே கண்ணீரில் மூழ்கி போய் உள்ளது. தற்பொழுது இவரது திரைப்பயணத்தின் முக்கியமான தருணங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது .அதன்படி நடிகர் விஜயகாந்த் இயற்பெயர்  நாராயணன் விஜயராஜ் அழகர்சாமி என்பதாகும்.

இவர் மதுரை மாவட்டம், திருமங்கலத்தில் 1952-ம் ஆண்டு, ஆகஸ்டு 25-ம் தேதி அழகர்சாமி-ஆண்டாள் தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார். இவரின் மனைவி பிரேமலதா. இவர்களுக்கு விஜய பிரபாகரன், சண்முக பாண்டியன் என இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். சினிமாவிற்காக வேண்டி தனது பெயரை விஜயகாந்த் என மாற்றிக் கொண்டார். பல்வேறு சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்த இவர் தனது 100-வது படமாக 1991 இல் வெளிவந்த ‘கேப்டன்’ பிரபாகரன் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.

இத்திரைப்படத்தை இயக்குனர் ஆர் கே செல்வமணி இயக்கியிருந்தர். ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்ற திரைப்படம் தான் அவருக்கு ‘கேப்டன்’ என்ற பெயரை பெற்று தந்தது. இதைத்தொடர்ந்து அன்றிலிருந்து இன்று வரை மக்கள் மனதில் கேப்டனாக வாழ்ந்து வருகிறார் விஜயகாந்த். அவர் இந்த மண்ணுலகை விட்டு மறைந்தாலும் நம் நெஞ்சங்களில் கேப்டனாக வாழ்ந்து கொண்டே தான் இருப்பார்.