“17 தொகுதிகள் + 1 ராஜ்யசபா சீட்”…. அதிமுக – பாமக இடையே திடீர் டீல்?… எடப்பாடியிடம் அன்புமணி வைத்த ‘மாஸ்’ டிமாண்ட்….!

By Nanthini on பங்குனி 1, 2026

Spread the love

தமிழகத்தில் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ள நிலையில், கூட்டணி கட்சிகளுடனான தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையை அதிமுக இன்று அதிகாரப்பூர்வமாகத் தொடங்குகிறது. மதுரையில் இன்று தேசிய ஜனநாயகக் கூட்டணியின் (NDA) பிரம்மாண்ட மாநாடு நடைபெற உள்ள சூழலில், அங்குள்ள தனியார் ஓட்டல் ஒன்றில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் சந்தித்துப் பேச உள்ளனர். இந்த முதற்கட்டப் பேச்சுவார்த்தையில், பாமக தரப்பில் 17 சட்டமன்றத் தொகுதிகள் மற்றும் ஒரு ராஜ்யசபா சீட் கோரப்படலாம் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இது அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாமக உடனான இந்த முக்கிய சந்திப்பைத் தொடர்ந்து, பாஜக பிரதிநிதிகளுடனும் அதிமுக தலைமை தொகுதிப் பங்கீடு குறித்து ஆலோசனை நடத்த உள்ளது. மாநாட்டிற்கு இடையே நடைபெறும் இந்தத் தொடர் பேச்சுவார்த்தைகள், கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகளுக்கான இடங்களை இறுதி செய்வதிலும், தேர்தல் வியூகங்களை வகுப்பதிலும் முக்கியப் பங்கு வகிக்கும் எனக் கருதப்படுகிறது. தொகுதிகளின் எண்ணிக்கை மற்றும் வெற்றி வாய்ப்புள்ள இடங்கள் குறித்து விரிவான விவாதங்கள் நடைபெறவுள்ளதால், இன்றைய தினமே கூட்டணியின் தொகுதிப் பங்கீடு குறித்த ஒரு தெளிவான சித்திரம் கிடைக்க வாய்ப்புள்ளது.